Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தமிழில் நைட் ஷோவாக ரீமேக்காகும் மலையாள ஷட்டர்

தமிழில் நைட் ஷோவாக ரீமேக்காகும் மலையாள ஷட்டர்
, செவ்வாய், 30 ஜூன் 2015 (09:49 IST)
நாடக ஆசிரியர், இயக்குனர், நடிகர் என்று பல்துறையில் கவனம் செலுத்தும் ஜாய் மேத்யூ எழுதிய இயக்கிய படம், ஷட்டர். ஒரு இரவில் நடக்கும் சம்பவங்களின் கோர்வைதான் இப்படம். சின்ன பட்ஜெட்டில் சிறந்த படத்தை தர முடியும் என்பதற்கு ஷட்டர் ஒரு உதாரணம்.
லால், சீனிவாசன், நாடக நடிகை சஜிதா ஆகியோர் பிரதான வேடம் ஏற்றிருந்த இந்தப் படத்தை இந்தியில் அல்போன்ஸ் புத்திரன் ரீமேக் செய்ய முயன்றார். அதற்குள், தமிழில் ஷட்டர் ரீமேக்காகிறது.
 
ஷட்டரின் தமிழ் ரீமேக்கை இயக்குனர் விஜய் தயாரிக்க, எடிட்டர் ஆண்டனி இயக்கப் போவதாக முன்பே நாம் செய்தி வெளியிட்டிருந்தோம். இப்போது அதனை அதிகாரப்பூர்வமாக அறிவித்து பர்ஸ்ட் லுக்கையும் வெளியிட்டுள்ளனர். படத்தின் பெயர், நைட் ஷோ.
 
நயன்தாரா நடிக்கும் பேய் படத்துக்கு முதலில் நைட் ஷோ என்று பெயர் வைத்து, வரிச்சலுகை கிடைக்காது என்பதால் நைட் ஷோ என்ற ஆங்கிலப் பெயரை மாற்றி, மாயா என பெயர் வைத்தனர். அவர்கள் தூக்கிப்போட்ட நைட் ஷோவை இவர்கள் எடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.
 
சத்யராஜ் இதில் லால் நடித்த வேடத்தை செய்கிறார். உன் சமையல் அறையில், மாலினி பாளையங்கோட்டை போன்ற விபத்து நைட் ஷோவுக்கு நேராது என நம்புவோம்.

Share this Story:

Follow Webdunia tamil