Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கார்த்தி படத்தை உதறிய ஸ்ருதி - கால்ஷீட் பிரச்சனையாம்

கார்த்தி படத்தை உதறிய ஸ்ருதி - கால்ஷீட் பிரச்சனையாம்
, வெள்ளி, 27 மார்ச் 2015 (11:44 IST)
பிரெஞ்சில் வெளியான இன்டச்சபிள்ஸ் படத்தின் ரீமேக் உரிமையை முறைப்படி வாங்கி தமிழ், தெலுங்கில் எடுக்கின்றனர். பிவிபி சினிமாஸும், தில் ராஜுவும் இணைந்து தயாரிக்கும் இந்த இருமொழி ரீமேக்கில் கார்த்தியும், நாகார்ஜுனாவும் நடிக்கின்றனர்.
 

 

 
இந்தப் படத்தில் ஸ்ருதி ஹீரோயினாக ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். இந்நிலையில் அவர் திடீரென்று படத்திலிருந்து விலகியுள்ளார்.
 
ஸ்ருதி தற்போது விஜய்யுடன் புலி படத்தில் நடித்து வருகிறார். சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜீத் நடிக்கும் படத்திலும் அவர் ஒப்பந்தமாகியுள்ளார். தெலுங்கில் மகேஷ் பாபுவின் அடுத்தப்பட ஹீரோயின் அவர்தான். இதுதவிர இந்திப் படங்கள் இருக்கின்றன.
 
பிஸி ஷெட்யூல்ட் காரணமாக அவர் கார்த்தி படத்திலிருந்து விலகியுள்ளார். தற்போது வேறு ஹீரோயினை தேடி வருகிறார்கள்.

Share this Story:

Follow Webdunia tamil