Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பொதுவெளியில் கணவர் கொடுத்த முத்தம்… இதெல்லாம் ஒரு சர்ச்சையா என சலித்துக்கொண்ட ஸ்ரேயா!

Webdunia
சனி, 26 நவம்பர் 2022 (09:03 IST)
நடிகை ஸ்ரேயா திருமணமாகி வெளிநாட்டில் குடியேறிவிட்ட நிலையில் அங்கிருந்து வந்து அவ்வப்போது படங்களில் நடித்து வருகிறார்.

தென்னிந்திய மொழி படங்களில் முன்னணி நடிகையாக விளங்கியவர் ஸ்ரேயா. ரஜினியோடு சிவாஜி படத்தில் நடித்ததை அடுத்து முன்னணி கதாநாயகர்களோடு ஜோடி சேர்ந்து நடித்து வந்தார். இடையில் பெரிய சம்பளத்துக்காக வடிவேலுவின் இந்திரலோகத்தில் நா அழகப்பன் படத்தில் ஒரு பாடலுக்கு கவர்ச்சி நடனம் ஆடினார். அதன் பிறகு அவருக்கான வாய்ப்புகள் குறைய ஆரம்பித்தன.

ஒரு கட்டத்தில் மற்ற மொழிகளிலும் வாய்ப்புகள் குறைய வெளிநாட்டுக் காதலரை திருமணம் செய்துகொண்டு பாரினிலேயே செட்டில் ஆகிவிட்டார்.

இந்நிலையில் இப்போது அவர் நடித்துள்ல திரிஷ்யம் 2 திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது. இதையடுத்து அந்த படத்தின் வெற்றி விழாவில் ஸ்ரேயா தன் கணவரோடு கலந்துகொண்டார். அப்போது அவர்கள் இருவரும் முத்தமிட்டுக் கொண்டனர். இது சர்ச்சையாகக் கிளம்ப “இதெல்லாம் ஒரு பிரச்சனையா. சிறப்பான தருணங்களில் என் கணவர் எனக்கு முத்தமிடுவது சாதாரண ஒன்றுதான்” என பதிலளித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

விடுதலை 2 ஊடக விமர்சனம்: வெற்றிமாறனின் கம்யூனிச கையேடா? படம் எப்படி இருக்கிறது?

முஃபாசா படத்துக்கு பூனைக்குட்டியா? மகேஷ் பாபு ரசிகர்கள் அட்டகாசம்!

கடைசி நேரத்தில் விடாமுயற்சி படத்தில் இணைந்த பிரபலம்.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

அம்பேத்கர் குறித்து அமித்ஷா பேசியது கண்டனத்துக்குரியது: இயக்குனர் வெற்றிமாறன்

மாடன் லுக்கில் ஜொலிக்கும் ஆரத்தி மாளவிகா மோகனன்… ஸ்டன்னிங் க்ளிக்ஸ்!

அடுத்த கட்டுரையில்