ஷிவாங்கி பெற்றோர்களுக்கும் கலைமாமணி விருது: வைரல் புகைப்படம்

Webdunia
ஞாயிறு, 21 பிப்ரவரி 2021 (10:11 IST)
ஷிவாங்கி பெற்றோர்களுக்கும் கலைமாமணி விருது
சமீபத்தில் தமிழக அரசு கலைமாமணி பட்டம் பெற்றவர்களின் பட்டியலை அறிவித்தது என்பதும் அந்த பட்டியலில் சிவகார்த்திகேயன் உள்பட பல நடிகர்களும் ஒரு சில இயக்குனர்கள் பாடகர்கள் கர்நாடக இசை கலைஞர்கள் இருந்தார்கள் என்பது தெரிந்ததே 
 
இந்த நிலையில் சூப்பர் சிங்கர், குக் வித் கோமாளி கோமாளி உள்பட ஒருசில நிகழ்ச்சிகளில் பங்கு கொள்ளும் ஷிவாங்கியின் பெற்றோர்களும் கலைமாமணி விருதைப் பெற்றுள்ள தகவல் தற்போது வெளிவந்துள்ளது 
 
நேற்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் கலைமாமணி விருது பெற்றவர்களுக்கு விருதை வழங்கிய போது அதில் ஷிவாங்கியின் பெற்றோர்களும் விருதை பெற்றுக் கொண்டனர். இதுகுறித்த புகைப்படத்தை ஷிவாங்கியின் பெற்றோர்கள் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளனர் 
 
இதனை அடுத்து ஷிவாங்கியின் பெற்றோர்களுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. ஷிவாங்கியின் பெற்றோர்களான கிருஷ்ணகுமார் மற்றும் பின்னி கிருஷ்ணகுமார் ஆகிய இருவரும் மிகச்சிறந்த கர்நாடக இசைக் கலைஞர்கள் என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரகுல் ப்ரீத் சிங்கின் லேட்டஸ்ட் கிளாமர் லுக் க்ளிக்ஸ்!

ரஜினி படத்தில் இருந்து விலகுகிறேன்… சுந்தர் சி திடீர் அறிவிப்பு!

பணமோசடி வழக்கு… இளம்பெண்ணின் தந்தை கொடுத்த புகாரில் ‘பிக்பாஸ்’ புகழ் தினேஷ் கைது!

மீண்டும் இணையும் ராஜமௌலி & ஜூனியர் என் டி ஆர்… பயோபிக் படமா?

விஜய் சேதுபதி நடிப்பில் பாலாஜி தரணிதரன் இயக்கும் படத்தில் இவர்தான் ஹீரோயின்!

அடுத்த கட்டுரையில்
Show comments