Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நயன்தாராவின் நண்பேன்டாவில் ஷெரின், சூசன் ஜார்ஜ்

நயன்தாராவின் நண்பேன்டாவில் ஷெரின், சூசன் ஜார்ஜ்
, புதன், 19 நவம்பர் 2014 (11:40 IST)
நயன்தாரா, உதயநிதி நடித்திருக்கும் நண்பேன்டா படத்தின் டீஸரை இந்த மாத இறுதியில் வெளியிடுகின்றனர். படம் முடிவடைந்திருக்கும் நிலையில் படத்தில் நடித்தவர்கள் குறித்து சுவாரஸியமான செய்திகள் வெளிவந்துள்ளது.
நயன்தாரா, உதயநிதி தவிர்த்து நடிகை ஷெரின் இதில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளாராம். அதேபோல் சூசன் ஜார்ஜும் படத்தில் இருக்கிறார். சூசன் மைனா படத்தில் நெகடிவ் வேடத்தில் நடித்து பிரபலமானவர். அதன் பிறகு இந்தப் படம்தான் ஓரளவு பெயர் சொல்லும்படியான வேடமாம். ஆனால் மைனா போல நெகடிவ் ரோல் கிடையாது என்றார்.
webdunia
இவர்கள் தவிர கருணாகரன், நான் கடவுள் ராஜேந்திரன் ஆகியோரும் படத்தில் இருக்கிறார்கள். உதயநிதியின் ரெட்ஜெயண்ட் தயாரிக்க, ஹாரிஸ் இசையமைத்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil