Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோலிவுட்டில் நெபோட்டிசம், க்ரூபிஸம் இருக்கு... ஒப்புக்கொண்ட வாரிசு நடிகர்!!

Webdunia
புதன், 29 ஜூலை 2020 (09:44 IST)
கோவிவுட்டில் உள்ள வாரிசு அரசியல் மற்றும் க்ரூபிஸம் குறித்து நடிகர் சாந்தனு மனம் திறந்துள்ளார். 
 
இந்தியாவிலேயே முதன்முறையாக சிறந்த இசை, பாடல் போன்றவற்றிற்கு ஆஸ்கர் விருதை வென்று ஒட்டுமொத்த உலகையும் இந்தியாவை திரும்பி பார்க்க செய்தவர் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான். ஆனால் அப்படியானவருக்கே பாலிவுட் திரையுலகம் வாய்ப்புகள் மறுப்பதாக அவரே சொல்லியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஏ.ஆர்.ரகுமான் சொன்னத்து உண்மைதான் என தனது அனுபவங்களை வெளியிட்டுள்ளார் ஆஸ்கர் விருது வென்ற ரசூல் பூக்குட்டி. 
 
அதாவது நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மரணத்தை தொடர்ந்து பாலிவுட்டில் வாரிசுகளின் ஆதிக்கம் அதிகம் இருப்பதாக புகார்கள் குவியத் தொடங்கியுள்ளன. இதனைத்தொடர்ந்து டோலிவுட்டிலும் இந்த பிரச்சனை இருக்கிறது என பேச்சுக்கள் எழுந்தது. 
 
டோலிவுட்டோடு நிற்காமல் கோலிவுட் பக்கமும் இது திரும்பியுள்ளது. ஆம், ஒளிப்பதிவாளர் மற்றும் நடிகர் நட்டி என்கிற நடராஜ் தமிழ் சினிமாவில் க்ரூபிஸம் உள்ளதாக கூறினார். இவரை தொடர்ந்து தற்போது பாக்கியராஜ் மகன் சாந்தனு இது குறித்து மனம் திறந்துள்ளார். 
 
சாந்தனு கூறியதாவது, வாரிசு அரசியல் இங்கேயும் உள்ளது. அதே குழு அரசியல் நபர்கள் தான் நம்முடன் யார் வேலை செய்ய வேண்டும் என்பதை தீர்மானிப்பார்கள். தரத்தை பராமரிக்க அவர்கள் ஒரு சிலரை ஆதரிக்கிறார்கள். மற்றவர்களை தங்கள் தரத்தை அதிகரிக்க அனுமதிக்க மாட்டார்கள் என்று டிவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

குத்துப் பாட்டு என்றாலே உற்சாகம்தான்… கூலி படத்தில் நடனமாடியது ஏன்? – பூஜா ஹெக்டே பதில்!

பணத்திற்காக ஆபாச படங்களில்..? இப்போ தலைவர் பதவிக்கு ஆசையா? - நடிகை ஸ்வேதா மேனன் மீது பகீர் புகார்!

பிரபாஸின் ‘ஸ்பிரிட்’ படம் தொடங்குவதில் மீண்டும் தாமதம்… பின்னணி என்ன?

சிவகார்த்திகேயனுக்கு வில்லனாகும் ஆர்யா?... எந்த படத்தில் தெரியுமா?

கூலி படம் 1000 கோடி ரூபாய் வசூலிக்காது… தயாரிப்பாளர் தனஞ்செயன் சொல்லும் காரணம்!

அடுத்த கட்டுரையில்
Show comments