Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வெறிகொண்டு கலாய்க்கும் நெட்டிசன்ஸ்… எமோஷனலாக பதிலளித்த சாந்தனு!

Webdunia
வெள்ளி, 26 மார்ச் 2021 (14:44 IST)
மாஸ்டர் படத்தில் சாந்தனு நடித்திருந்த பார்கவ் கதாபாத்திரம் மிகப்பெரிய மீம் மெட்டீரியல் ஆகியுள்ளது.

மாஸ்டர் படத்தில் கமிட்டானதில் இருந்து சாந்தனு மீது கவனம் விழுந்தது. அவரும் படம் பற்றியும் படத்தில் தன் கதாபாத்திரம் குறித்தும் அதிகமாக பேசிக்கொண்டிருந்தார். ஆனால் படத்தில் அவரின் கதாபாத்திரத்துக்கு எந்த முக்கியத்துவமும் இல்லை. மேலும் திரையில் 10 நிமிடங்களுக்கு மேல் அவர் தோன்றவும் இல்லை. இதையெல்லாம் பார்த்து கடுப்பான ரசிகர்கள் அந்த கதாபாத்திரத்தை கலாய்க்க ஆரம்பித்தனர்.

சினிமா உலகில் மோசமான வில்லன்களை எல்லாம் விட மோசமான வில்லன் பார்கவ்தான் என்று கலாய்த்து வந்த நிலையில் இப்போது தேசிய விருது பெற்றுள்ளார் பார்கவ் என்று கலாய்க்க, கடுப்பாகியுள்ளார் சாந்தனு. இது சம்மந்தமான டிவீட்டில் ‘ஒருவரை கலாய்ப்பதின் மூலம் சிறிய சந்தோஷத்தை பெறுகின்றனர். இது போன்ற மீம்களால் அசதியாகிவிட்டேன். ஆனால் நீங்கள் என் மீது வீசும் கற்களுக்கு நன்றி. நீங்களே சொல்லீட்டிங்க நடக்காம போயிடுமா?ஒரு நாள் நான் தேசிய விருது வாங்குவேன். அப்போது நான் சிரித்த முகத்தோடு உங்களுக்கு பதிலளிப்பேன்’ எனக் கூறியுள்ளார். சாந்தனுவின் இந்த டிவீட்டை அடுத்து அவருக்கு ஆதரவு கூடி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

திவ்யபாரதியின் லேட்டஸ்ட் கிளாமரஸ் க்ளிக்ஸ்!

எந்த பக்கம் நீ நின்றாலும் அந்த பக்கம் கண்கள் போகும்… க்யூட் லுக்கில் சமந்தா அசத்தல்!

ஒரே நாளில் ரிலீஸாகும் அனுஷ்கா & ராஷ்மிகா படங்கள்!

ராகு காலத்தில்தான் எனக்குப் பேருவச்சாங்க… நான் என்ன உருப்படலயா? – சுந்தர்ராஜனின் லாஜிக் கேள்வி!

600 க்கும் மேற்பட்ட ஸ்டண்ட் நடிகர்களுக்கு காப்பீடு எடுத்துக் கொடுத்த அக்‌ஷய் குமார்!

அடுத்த கட்டுரையில்
Show comments