Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சண்முக பாண்டியன் ஹீரோவாக நடிக்கும் அடுத்த படம்.. பூஜையுடன் தொடக்கம்!

Webdunia
திங்கள், 17 ஜூலை 2023 (07:33 IST)
கேப்டன் என்ற வார்த்தையை கேட்டாலே நினைவில் வருபவர் விஜயகாந்த். அவரது மகனான சண்முகபாண்டியன் மதுர வீரன் என்ற படத்தில் நடித்திருந்தார். ஆனால் இன்னும் அவர் ஹிட் கொடுக்க முடியாமல் போராடி வருகிறார். கடைசியாக இவர் நடித்த ‘மதுர வீரன்’ திரைப்படம் பெரிய வெற்றியை பெறவில்லை என்றாலும் ஓரளவு நடித்திருந்தார் என்ற பெயரை கொடுத்தது.

இந்நிலையில் இப்போது சண்முகபாண்டியன் காட்டையும் யானைகளையும் பின்னணியாகக் கொண்ட புதிய படம் ஒன்றில் கதாநாயகனாக நடிக்க உள்ளார். இந்த படத்தை வால்டர் மற்றும் ரேக்ளா ஆகிய படங்களை இயக்கிய அன்பு இயக்க உள்ளார்.  கடந்த சனிக்கிழமை இந்த படத்தின் பூஜை நடந்தது. அதில் பிரேமலதா விஜயகாந்த் கலந்துகொண்டு படக்குழுவினரை வாழ்த்தினார்.

இந்த படத்தின் டைட்டில் விரைவில் அறிவிக்கப்படும் என சொல்லப்படும் நிலையில் படத்தில் கஸ்தூரி ராஜா, எம் எஸ் பாஸ்கர் யாமினி சந்தர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நடிகை பிந்து போஸுக்கு கே.பி.ஒய் பாலா வழங்கிய உதவி.. ஷகிலா எடுத்த பேட்டி..!

ஸ்ரேயாவின் லேட்டஸ்ட் ஹாட் & க்யூட் போட்டோஷூட் ஆல்பம்!

பூனம் பாஜ்வாவின் லேட்டஸ்ட் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

மணிகண்டனின் ‘குடும்பஸ்தன்’ திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த தகவல்!

எகிறிய கடன்! நடிகர் திலகம் சிவாஜியின் வீடு ஜப்தி! - நீதிமன்றம் உத்தரவு!

அடுத்த கட்டுரையில்
Show comments