விஜயகாந்த் பிறந்தநாளில் ரிலீஸ் ஆகிறதா சண்முக பாண்டியனின் ‘படை தலைவன்’?

vinoth
வியாழன், 1 ஆகஸ்ட் 2024 (09:36 IST)
மறைந்த நடிகர் விஜயகாந்தின் இளைய மகன் சண்முகபாண்டியன் மதுர வீரன் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். ஆனால் இன்னும் அவர் ஹிட் கொடுக்க முடியாமல் போராடி வருகிறார். இவர் நடித்த ‘மதுர வீரன்’ திரைப்படம் பெரிய வெற்றியை பெறவில்லை என்றாலும் ஓரளவு அவருக்கான  அடையாளத்தைப் பெற்று தந்தது.

இந்நிலையில் இப்போது சண்முகபாண்டியன் காட்டையும் யானைகளையும் பின்னணியாகக் கொண்ட படை தலைவன் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை வால்டர் மற்றும் ரேக்ளா ஆகிய படங்களை இயக்கிய அன்பு இயக்கியுள்ளார். படத்துக்கு இளையராஜா இசையமைக்கிறார். சமீபத்தில் இந்த படத்தின் மொத்தக் காட்சிகளும் படமாக்கப்பட்டு முடிக்கப்பட்டுள்ளது.

தற்போது போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடந்து வரும் நிலையில் படத்தை விஜயகாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு ஆகஸ்ட் 23 ஆம் தேதி வெளியிடப் படக்குழு திட்டமிட்டு வேலை செய்து வருவதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரி ரிலீஸுக்குத் தயாரான அஜித்தின் சூப்பர்ஹிட் திரைப்படம்!

இயக்குனர் எல்லை மீறினார்… நடிகர் மௌனம் காத்தார்… நடிகை திவ்யபாரதி ஆதங்கம்!

லோகா நாயகி கல்யாணி நடிக்கும் புதிய தமிழ்ப் படம்… பூஜையோடு தொடக்கம்!

என் கணவரப் பாத்தா DNA டெஸ்ட்டுக்கு வர சொல்லுங்க… ஜாய் கிரிசில்டா நக்கல் பதிவு!

காந்தாரா எஃபக்ட்டால் கருப்பு படத்தில் நடக்கும் அதிரடி மாற்றங்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments