அந்த நாளில் ஷூட் வேண்டாம்… செண்ட்டிமெண்ட்டாக மறுத்த இயக்குனர் ஷங்கர்

Webdunia
திங்கள், 20 பிப்ரவரி 2023 (15:41 IST)
இயக்குனர் ஷங்கர் இயக்கி வரும் இந்தியன் 2 திரைப்படத்தின் ஷூட்டிங் சென்னையில் நடந்து வருகிறது.

கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் ’இந்தியன் 2’ படம் தொடங்கப்பட்டு நான்கு ஆண்டுகளுக்கு மேலாகியும் இன்னும் ரிலீஸாகவில்லை. படப்பிடிப்புத் தளத்தில் நடந்த விபத்துக் காரணமாக மூன்று பேர் உயிரிழந்ததை அடுத்து படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.

இதற்கிடையில் ஷங்கர் தற்போது ராம்சரண் மற்றும் கியாரா அத்வானி ஆகியோர் நடிக்கும் “RC 15” படத்தையும் இயக்கி வருகிறார். ஷங்கர் தன் திரை வாழ்க்கையில் முதல் முறையாக ஒரே நேரத்தில் இரண்டு படங்களை இயக்கி வருகிறார்.

இந்நிலையில் இப்போது இந்தியன் 2 ஷூட்டிங் சென்னையில் நடந்து வரும் நிலையில் பிப்ரவரி 19 ஆம் தேதி நேற்று ஷூட்டிங் வேண்டாம் என சொல்லிவிட்டாராம் ஷங்கர். அதற்குக் காரணம் மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் இதே நாளில்தான் இந்தியன் 2 ஷூட்டிங் விபத்து நடந்து மூன்று பேர் இறந்தார்கள் என்பதால் செண்ட்டிமெண்ட்டாக நேற்று ஷூட்டிங் வேண்டாம் என சொல்லிவிட்டாராம்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தொடங்கியது கவினின் ‘மாஸ்க்’ பட வியாபாரம்… டிஜிட்டல் உரிமத்தைக் கைப்பற்றிய பிரபல நிறுவனம்!

மகுடம் படத்தின் இயக்குனர் ஆனார் விஷால்… வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

வசூலில் பட்டையக் கிளப்பும் ‘ட்யூட்’… மூன்று நாளில் 66 கோடி ரூபாய்!

இரண்டாவது சிம்ஃபொனியை எழுதவுள்ளேன்… தீபாவளி நாளில் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த இசைஞானி!

தியேட்டர்ல்ல ஒரு ஹிட் கொடுக்க தெரியல, என்ன கிண்டல் பண்ண வந்துட்டாங்க.. சூர்யா ரசிகர்களை பொளந்த மோகன் ஜி

அடுத்த கட்டுரையில்
Show comments