Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கேம் சேஞ்சர் படத்தின் ஷூட்டிங் முடிந்தததா? இயக்குனர் ஷங்கர் கொடுத்த அப்டேட்!

vinoth
செவ்வாய், 9 ஜூலை 2024 (08:42 IST)
தெலுங்கு சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் ராம்சரண். சமீபத்தில் இவர் நடித்து வெளியான RRR திரைப்படம் உலக அளவில் பிரபலமான நிலையில், ராம்சரணின் அடுத்த படமான கேம்சேஞ்சர் படத்தை இயக்குனர் ஷங்கர் இயக்க தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரிக்கிறார். இந்த படத்துக்கு இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் கதை எழுதியுள்ளார். படத்தில் வில்லனாக எஸ் ஜே சூர்யா நடிக்கிறார்.

இந்த படத்தின் ஷூட்டிங் பல மாதங்களாக விட்டு விட்டு நடந்து வருகிறது. இயக்குனர் ஷங்கர் இந்தியன் 2 படத்தின் ஷூட்டிங்கிலும் பிஸியாக இருப்பதே இந்த படத்தின் தாமதத்துக்குக் காரணம். இந்த படத்தின் முதல் சிங்கிள் பாடல் இன்று ராம்சரணின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியானது. ஆனால் அந்த பாடல் பெரியளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.

இந்நிலையில் தற்போது இந்தியன் 2 படத்தின் ப்ரமோஷன் பணிகளில் இருக்கும் ஷங்கர் ஐதராபாத்தில் பேசும்போது “கேம் சேஞ்சர் படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்துவிட்டது” எனக் கூறியுள்ளார். விரைவில் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் தொடங்கி அடுத்த ஆண்டு சங்கராந்திக்கு இந்த படம் ரிலீஸாகும் என தெரிகிறது. படத்தின் பட்ஜெட் எதிர்பார்த்ததை விட ஒரு பெரும் தொகை அதிகமாகியுள்ளதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அழகேஅஜித்தே… புது ஸ்லோகனை அறிமுகப்படுத்திய பிரசன்னா.. இனிமே இதப் புடிச்சுக்குவாங்களே!

மாடர்ன் ட்ரஸ்ஸில் எஸ்தர் அனிலின் ஸ்டன்னிங்கான போட்டோஷூட் ஆல்பம்!

குழந்தை போல அருகில் உட்கார்ந்து சொல்லிக் கொடுக்க முடியாது… பிரித்வி ஷா குறித்து ஸ்ரேயாஸ் ஐயர்!

ராம்சரண் படத்தில் ஏன் நடிக்கவில்லை… விஜய் சேதுபதி அளித்த நறுக் பதில்!

இளையராஜா ஏன் அர்த்த மண்டபத்துக்குள் அனுமதிக்கப்படவில்லை?… அறநிலையத்துறை விளக்கம்!

அடுத்த கட்டுரையில்
Show comments