ஷங்கர்- ராம்சரண் படத்தின் தலைப்பு இதுவா? வெளியான லேட்டஸ்ட் தகவல்!

Webdunia
வெள்ளி, 8 ஜூலை 2022 (10:30 IST)
இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண் நடித்து வரும் படத்துக்கு RC 15 என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் கமல்ஹாசன் நடித்து வரும் இந்தியன் 2 படத்தை இயக்கி வந்த நிலையில் திடீரென அந்த படத்தை கைவிட்டுவிட்டு தற்போது ராம்சரண் தேஜா நடித்த உள்ள தெலுங்கு படம் ஒன்றை இயக்கவுள்ளார். இந்த படத்தை தெலுங்கு சினிமாவின் முன்னணி தயாரிப்பாளராக இருந்து வரும் தில் ராஜு தயாரிக்கிறார். படத்தின் கதாநாயகியாக கியாரா அத்வானி அதிகாரப்பூர்வமாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கி நடந்து வருகிறது. இந்நிலையில் இந்த ஆண்டு இறுதிக்குள் இந்த படத்தின் மொத்த படப்பிடிப்பையும் முடித்து 2023 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு ரிலீஸ் செய்ய தயாரிப்பாளர் முடிவு செய்துள்ளாராம். இந்த படத்தில் முக்கியக் கதாபாத்திரங்களில் சுரேஷ் கோபி, ரஹ்மான் ஆகியோர் நடிக்கின்றனர். இந்நிலையில் வில்லனாக நடிக்க எஸ் ஜே சூர்யாவிடம் பேசி சம்மதம் வாங்கியுள்ளார்களாம்.

இந்த படத்துக்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. தற்போது RC 15 என்று தற்காலிகமாக அழைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் படத்துக்கு தமிழ் தெலுங்கு என இருமொழிகளிலும் பரிச்சயமான தலைப்பை வைக்க படக்குழு முடிவு செய்துள்ளதாக சொலல்ப்படுகிறது. படத்தில் ராம்சரண் ஐஏஎஸ் அதிகாரியாக நடிக்கிறார். இதையடுத்து ‘அதிகாரி’ என்று தலைப்பு வைக்க பரிசீலனை செய்துவருவதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சுந்தர்.சியின் திரையுலக பயணம்.. ரஜினி 173ல் எப்படி வொர்க் அவுட் ஆகப் போகிறது?

ஜர்னலிசத்தை சாக்கடைக்கு கொண்டு செல்கிறார்கள்! - கவுரி கிஷன் விவகாரத்தில் குஷ்பூ ஆவேசம்!

விஜய் குறித்து நான் பேட்டியில் கூறியது என்ன: அஜித்தின் விளக்க அறிக்கை..!

ரீனாவை காப்பாற்றினாரா தந்தை விஜய்? 'ஹார்ட் பீட் - 2' இணையத்தொடர் இன்றுடன் நிறைவு..!

ஊதித் தள்ள நான் மண் அல்ல.. மலை..! கவனம் ஈர்த்த காந்தா பட ட்ரெய்லர்!

அடுத்த கட்டுரையில்
Show comments