Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியன், முதல்வன் & சிவாஜி ஆகிய மூன்று பேரும் ஒரே படத்தி… ஷங்கர் போட்ட திட்டம்!

vinoth
சனி, 29 ஜூன் 2024 (07:10 IST)
தமிழ் சினிமாவுக்கு பிரம்மாண்டம் எனும் இறக்கையைக் கட்டிவிட்டவர்களில் ஒருவர் இயக்குனர் ஷங்கர். அவர் அறிமுகமான ஜெண்டில்மேன் படத்தில் இருந்து அவர் எடுத்த அனைத்து படங்களும் அவற்றின் பிரம்மாண்டத்துக்காக பேசப்பட்டவை.

இந்நிலையில் அவர் இயக்கத்தில் 1996 ஆம் ஆண்டு உருவாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற இந்தியன் படத்தின் இரண்டாம் பாகத்தை இப்போது இயக்கியுள்ளார். இந்த படம் ஜூலை 12 ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது.

படத்தின் டிரைலர் சமீபத்தில்வெளியான நிலையில் இணையத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது. டிரைலரில் அதிக காட்சிகளில் கமல் இல்லை. அதனால் இந்த பாகத்தில் அவர் குறைவான நேரமே வருவாரோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அதே போல படத்தில் சேனாபதி கதாபாத்திரத்தின் வயது 106 எனக் காட்டப்படுகிறது. அதனால் எப்படி 106 வயது முதியவரால் படத்தில்  வருவது போல சண்டை போட முடியும் என விமர்சனங்கள் எழுந்தன.

இந்நிலையில் இப்போது இயக்குனர்கள் தங்கள் யூனிவர்ஸ்களை உருவாக்குவது ஒரு ட்ரண்ட் ஆகி வரும் நிலையில் இயக்குனர் ஷங்கருக்கும் அந்த எண்ணம் 2008 ஆம் ஆண்டே தோன்றியதாம். அப்போது அவரின் கதாபாத்திரங்களான இந்தியன், முதல்வன் மற்றும் சிவாஜி ஆகியோரை ஒரே படத்தில் கொண்டு வருவது சம்மந்தமாக யோசித்துள்ளார். ஆனால் அந்த யோசனைக்கு அவரது இயக்குனர் குழு பெரிதாக அக்கறை காட்டாததால் அதைக் கிடப்பில் போட்டுவிட்டாராம். இதை சமீபத்தில் ஒரு நேர்காணலில் அவர் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஹாட் லுக்கிங் போட்டோ ஆல்பத்தைப் பகிர்ந்த திஷா பதானி!

மஞ்சக் காட்டு மைனாவான ரகுல் ப்ரீத் சிங்… கண்கவர் ஆல்பம்!

ஒரு வழியாக இறுதிகட்டத்தை நெருங்கும் விடுதலை 2 ஷூட்டிங்!

ஷாலினிக்கு நடந்த அறுவை சிகிச்சை?... சென்னைக்கு திரும்பாமல் விடாமுயற்சி ஷூட்டிங்கில் அஜித்!

மீண்டும் சிம்பு படம் தொடங்குவதில் சிக்கல்… சம்பளப் பிரச்சனையால் இழுபறி!

அடுத்த கட்டுரையில்
Show comments