Webdunia - Bharat's app for daily news and videos

Install App

துருவ் விக்ரம் நடிக்கும் படத்தை இயக்குகிறாரா ஷங்கர்?

vinoth
சனி, 15 பிப்ரவரி 2025 (08:00 IST)
ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண் நடிப்பில், தில் ராஜூ தயாரித்த ‘கேம்சேஞ்சர்’ திரைப்படம் சங்கராந்தியை முன்னிட்டு ஜனவரி 10 ஆம் தேதி ரிலீஸ் ஆகி படுதோல்வி அடைந்தது. படம் மிக அதிக பொருட்செலவில் பிரம்மாண்டமாக உருவாகி ரிலீஸானது. முதல் நாளில் உலகளவில் 186 கோடி ரூபாய் வசூலித்ததாக அறிவிக்கப்பட்டது. அதன் பின்னர் எழுந்த எதிரமறையான விமர்சனங்களால் வசூலில் பெரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.இதனால் இந்த படத்தின் பட்ஜெட்டில் 50 சதவீத வசூலைக் கூட படம் எடுக்கவில்லை என சொல்லப்படுகிறது.

அதற்கு முன்னர் ஷங்கர் இயக்கிய இந்தியன் 2 படமும் தோல்விப் படமாக அமைந்து சமூகவலைதளங்களில் கேலிகளை எதிர்கொண்டது. இந்த அடுத்தடுத்த தோல்விகளால் அவர் அடுத்து தொடங்கவிருந்த வேள்பாரி திரைப்படம் தொடங்குவதில் தாமதம் ஆகும் என சொல்லப்படுகிறது.

அதனால் அதற்குள் அவர் ஒரு சிறு பட்ஜெட் படத்தை இயக்கலாம் என்ற முடிவில் இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் சமீபத்தில் ஷங்கரை சந்தித்த விக்ரம் தன் மகன் துருவ்வை வைத்து ஒரு படத்தை இயக்கவேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

15 வருடத்தில் மூன்றே வெற்றி படங்கள் தான்.. என்ன ஆச்சு கமலுக்கு?

கலாச்சார சீர்ழிவா? கலாச்சார புரட்சியா? ‘தக்லைஃப்’ த்ரிஷா கேரக்டர் குறித்து நெட்டிசன்கள் ஆதங்கம்..!

ரொம்ப கேவலமா இருக்குது.. ‘தக்லைஃப்’ படத்தை வச்சு செஞ்ச பிரபல விமர்சகர்..!

கிளாமர் லுக்கில் கலக்கல் போஸ் கொடுத்த யாஷிகா ஆனந்த்!

ஹோம்லி லுக்கில் அழகு பதுமை ப்ரியங்கா மோகனின் க்யூட் க்ளிக்ஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments