Webdunia - Bharat's app for daily news and videos

Install App

RRR படம் எப்படி இருக்கு? இயக்குனர் ஷங்கரின் வைரல் பதிவு

Webdunia
சனி, 26 மார்ச் 2022 (09:31 IST)
இயக்குனர் ஷங்கர் ஆர் ஆர் ஆர் படம் பார்த்து தன்னுடைய கருத்தை சமூகவலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.

பிரமாண்ட இயக்குநர் ராஜமெளலி இயக்கத்தில், ஜூனியர் என்.டி.ஆர் – ராம்சரண் – ஆலியாபட் உள்ளிட்ட நட்சத்திரங்களில் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'ஆர்.ஆர்.ஆர்'( ரத்தம் ரணம் ரெளத்திரம்). மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படம் வரும் பொங்கல் பண்டியையொட்டி  ஜனவரி 7 ஆம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸாக இருந்தது.  இதற்காக படக்குழுவினர் இந்தியா முழுவதும் ப்ரமோஷன் செய்து வந்தனர். ப்ரமோஷன் பணிகளுக்காகவே கிட்டத்தட்ட 20 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டதாக சொல்லப்பட்டது. ஆனால் கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக இரண்டு மாதத்துக்கு பிறகு நேற்றுபடம் ரிலிஸாகியுள்ளது.

படம் குறித்து கலவையான விமர்சனங்கள் வந்தாலும், பாக்ஸ் ஆபீஸில் இந்த படம் கலக்கி வருகிறது. இந்நிலையில் இந்த படத்தை பார்த்துள்ள இயக்குனர் ஷங்கர் தன்னுடைய சமூகவலைதளப் பக்கத்தில் ‘ காலம் காலத்துக்கு எதிரொலிக்கப் போகும் கர்ஜனை… இந்த மாதிரி ஈடினையில்லாத ஒரு அனுபவத்தைக் கொடுத்த படக்குழுவுக்கு நன்றி. ராம்சரணின் ரேஜிங்கான நடிப்பு , ஜுனியர் என் டி ஆரின் இதயத்தைக் கவரும் நடிப்பு. உங்கள் கற்பனை ஈடு செய்ய முடியாதது ’மஹா’ராஜமௌலி’ எனப் படக்குழுவினரை பாராட்டியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அழகிய உடையில் கேட்வாக் போஸ் கொடுத்த மிருனாள் தாக்கூர்!

வித்தியாசமான காஸ்ட்யூமில் க்யூட்டான போஸ் கொடுத்த ஸ்ரேயா!

அடுத்தடுத்து மாஸ் படங்களில் கமிட்டாகும் சாய் அப்யங்கர்… சிம்பு படத்துக்கும் அவர்தானாம்!

தமிழ் சினிமாவில் பெண் இயக்குனர்களின் எண்ணிக்கைக் குறைவு.. பேட் கேர்ள் சர்ச்சை குறித்து மிஷ்கின் பேச்சு!

என்னுடைய காதலர் இவர்தான்.. காதலர் தினத்தில் அறிவித்த பிக்பாஸ் ஜாக்குலின்..!

அடுத்த கட்டுரையில்
Show comments