இந்தியன் 2 படத்தில் கமல் கொஞ்ச நேரம்தான் வருவாரா? இயக்குனர் ஷங்கர் அளித்த விளக்கம்!

vinoth
செவ்வாய், 9 ஜூலை 2024 (14:28 IST)
கமல்ஹாசன் மற்றும் பல முன்னணி நடிகர்கள் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் அனிருத் இசையில் உருவாகி இருக்கும் திரைப்படம் ’இந்தியன் 2’. இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்த நிலையில் வரும் ஜூலை மாதம் 12ஆம் தேதி வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தில் கமல்ஹாசனை விட அதிக நேரம் வரும் விதமாக சித்தார்த்தின் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த பாகத்தின் இரண்டாம் பாதியில் தான் இந்தியன் தாத்தா வருவாராம். அதனால் படக்குழுவுடன் இணைந்து சித்தார்த்தும் பல இடங்களில் நேர்காணல் கொடுத்து படத்துக்கு ப்ரமோஷன் செய்து வருகிறார். ஆனால் கமல் கொஞ்ச நேரமே வருவார் என்பது அவரது ரசிகர்களுக்கு ஒரு சிறு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இதுபற்றி பேசியுள்ள இயக்குனர் ஷங்கர், “இந்தியன் 2 படத்தில் கமல் கொஞ்ச நேரம்தான் வருவார் என்று சொல்லப்படுவது உண்மையில்லை. அவர் படம் முழுவதும் வருவார். அவர் வராத காட்சிகளில் கூட அவரை சுற்றியே கதை நகரும்” என விளக்கம் அளித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கார்த்தியின் ’வா வாத்தியாரே’ படத்தின் ரிலீஸ் எப்போது? தேதியை அறிவித்த படக்குழு!

நயன்தாரா நடிக்கும் படத்தில் கெமி.. பிக்பாஸ் வீட்டை இருந்து வெளியேறியதும் கிடைத்த வாய்ப்பு..!

ஒரு சிறிய புள்ளியில் நாம் வாழ்கிறோம்.. சமந்தா புதிய கணவரின் முன்னாள் மனைவியின் பதிவு..!

’காந்தாரா’ படத்தின் பெண் தெய்வத்தை கேலி செய்தாரா? மன்னிப்பு கேட்ட ரன்வீர் சிங்

இது ரொம்ப கோழைத்தனம்.. சின்மயி கேட்ட மன்னிப்புக்கு இயக்குனர் மோகன் ஜி கொடுத்த பதிலடி..

அடுத்த கட்டுரையில்
Show comments