Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஷாலினிக்கு நடந்த அறுவை சிகிச்சை?... சென்னைக்கு திரும்பாமல் விடாமுயற்சி ஷூட்டிங்கில் அஜித்!

vinoth
புதன், 3 ஜூலை 2024 (10:19 IST)
அஜித் மற்றும் ஷாலினி ஆகிய இருவரும் அமர்க்களம் படத்தில் நடித்த போது காதல் வயப்பட்டு திருமணம் செய்துகொண்டனர். அதன் பிறகு ஷாலினி சினிமாவில் இருந்து விலகி பேட்மிண்ட்டன் விளையாட்டில் கவனம் செலுத்தினார். இந்த தம்பதிகளுக்கு அனோஸ்கா மற்றும் ஆத்விக் ஆகிய இரு குழந்தைகள் உள்ளனர்.

திருமணம் ஆகி 23 ஆண்டுகள் வெற்றிகரமாக கடந்துள்ளனர். அஜித் கடந்த சில ஆண்டுகளாகவே பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதில்லை. அதுபோல எந்த சோஷியல் மீடியாவிலும் அவர் இல்லை. இந்நிலையில் கடந்த 2022 ஆம் ஆண்டு ஷாலினி அஜித் இன்ஸ்டாகிராமில் இணைந்தார். அதன் பின்னர் அவர் தன் குடும்பத்தினரோடு இருக்கும் புகைப்படங்களை எல்லாம் பகிர்ந்து வருகிறார்.

இந்நிலையில் தற்போது அஜித் விடாமுயற்சி ஷூட்டிங்குக்காக அஜித், அஸர்பைஜானுக்கு சென்றுள்ள நிலையில் ஷாலினிக்கு சென்னையில் ஒரு அறுவை சிகிச்சை நடந்துள்ளதாக சொல்லப்படுகிறது. ஆனால் அஜித் அவருடன் இருக்க சென்னைக்கு திரும்பவில்லையாம். அங்கிருந்தபடியே தொலைபேசியில் மருத்துவர்களிடம் மனைவியின் உடல்நலம் பற்றி கேட்டு விசாரித்து தெரிந்துகொண்டுள்ளாராம்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அல்லு அர்ஜுன் எதிராக அவதூறு கருத்துக்கள்: சட்டப்படி நடவடிக்கை என எச்சரிக்கை..!

பூனம் பாஜ்வாவின் லேட்டஸ்ட் கலர்ஃபுல் போட்டோஷூட் ஆல்பம்!

ஜான்வி கபூரின் லேட்டஸ்ட் வைரல் போட்டோஷூட் ஆல்பம்!

மீண்டும் பேச்சுவார்த்தை நடத்துங்கள்… ஜெயம் ரவி & ஆர்த்திக்கு நீதிமன்றம் உத்தரவு!

பாலாவுக்காக 10 கோடி ரூபாயை விட்டுக்கொடுத்த சூர்யா.. பிரபலம் பகிர்ந்த தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments