Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஷக்தி ரொம்ப மோசமானவர்: ரைசா பரபரப்பு குற்றச்சாட்டு!

ஷக்தி ரொம்ப மோசமானவர்: ரைசா பரபரப்பு குற்றச்சாட்டு!

Webdunia
வியாழன், 10 ஆகஸ்ட் 2017 (15:38 IST)
பிக் பாஸ் வீட்டில் உள்ள ஷக்தி ரொம்ப மோசமானவர் என அங்கு உள்ள ரைசா பரபரப்பு குற்றச்சாட்டு வைப்பது போன்ற புரோமோ வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.


 
 
ஓவியா பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியதை அடுத்து ஷக்தி, காயத்ரிக்கு எதிராக விஸ்வரூபம் எடுத்துள்ளார் ரைசா. ஷக்தி ஆணாதிக்கமிக்கவாரக உள்ளார், அவரும் காயத்ரியும் இங்கு நாட்டாமை போன்று உள்ளனர் என்றும் ரைசா பிக் பாஸ்ஸிடம் கூறினார்.
 
இதனையடுத்து இந்த வாரம் பிக் பாஸ் வீட்டின் தலைவராக ரைசா நியமிக்கப்பட்டார். அவர் தலைவராக நியமிக்கப்பட்டது முதல் காயத்ரி மற்றும் ஷக்தி ஆகியோர் ரைசாவுக்கு எதிராக உள்ளனர். குறிப்பாக காயத்ரிக்கும் ரைசாவுக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம் வந்துள்ளது.
 
இன்று காலை வெளியான புரோமோவில் கூட ரைசாவிற்கும் காயத்ரிக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. சினேகன், வையாபுரி ஆகியோரில் யாரை பாதுகாக்க விரும்புகிறீர்கள் என பிக்பாஸ் கேட்க, அனைவரும் அதுபற்றி ஆலோசனை செய்கின்றனர் வீட்டில் உள்ளவர்கள்.
 
அப்போது, வையாபுரி இங்கே இருந்தால் நல்லது என சச்தி கூற, ரைசாவோ சினேகனுக்கு ஆதரவு கொடுக்கிறார். காயத்ரி ஏதோ கூற, நாளைக்கு உங்களுக்கு ஒரு பிரச்சனை வந்தால்? என ரைசா காயத்ரியிடம் கேட்க, அதை நானே தனியாக சமாளித்துக்கொள்வேன் என காயத்ரி கூறுகிறார். அதைக் கேட்ட ரைசா காயத்ரியை பார்த்து ஒரு நமட்டு சிரிப்பு சிரிக்கிறார்.
 
இதனால், கோபமடைந்த காய்த்ரி, எதற்காக சிரித்தாய்? அதன் அர்த்தம் என்ன? என கோபமடைய, மற்றவர்கள் அவரை சமாதானம் செய்து அங்கிருந்து அழைத்து செல்கின்றனர். அதாவது, காயத்ரி தனக்கு எப்போதும் துணையாக சக்தி, சினேகன் போன்ற ஒருவரை கூட வைத்துக்கொண்டுதான் செயல்படுவார் என்பதை புரிந்துதுதான் ரைசா சிரித்தார் எனத் தெரிகிறது.
 
இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள புரோமோ வீடியோவில் ரைசாவும் சினேகனும் பேசிக்கொண்டு இருக்கிறார்கள். அதில் ரைசா கூறும் போது மிகவும் மோசமானவர் யார் தெரியுமா, ஷக்தி என கூறுகிறார்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அனிருத்துக்குப் போட்டியா சாய் அப்யங்கர்?… ரெண்டு பேரும் சேர்ந்து உருவாக்கி இருக்கும் பாட்டு!

லூசிஃபர் 3 பற்றி பரவிய வதந்தி… இயக்குனர் பிரித்விராஜ் மறுப்பு!

நான் கற்றுக் கொண்டிருந்தபோது அவன் தேசிய விருது வாங்கினான்… நண்பனைப் பாராட்டிய லோகேஷ்!

திரைப்படமாகிறது மேகாலயா ஹனிமூன் கொலை: ராஜா குடும்பத்தினர் சம்மதம்.. டைட்டில் அறிவிப்பு..!

40 கோடி சப்ஸ்க்ரைபர்களை தாண்டிய Mr.Beast! நேராக வீட்டுக்கு சென்று பரிசளித்த Youtube CEO!

அடுத்த கட்டுரையில்
Show comments