Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரே மேடையில் மூன்று ‘கான்’கள்; பாலிவுட் அதிசயம்

Webdunia
செவ்வாய், 26 மே 2015 (18:44 IST)
சல்மான் கானின் ’பஜ்ரங்கி பைஜான்’ என்ற திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியீட்டு விழாவில் ஷாருக் கான் மற்றும் அமீர் கான் கலந்து கொண்டனர்.
 
சல்மான் கான், கரீனா கபூர், நவாஸ்கான் சித்திக் ஆகியோர் நடிப்பில் வெளிவரவிருக்கும் திரைப்படம் ’பஜ்ரங்கி பைஜான்’. இப்படத்தை கபிர் கான் இயக்கியுள்ளார். சல்மான் கான் மற்றும் ராக்லைன் வெங்கடேஷ் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்திற்கு ப்ரிதம் இசை அமைத்துள்ளார்.

 
இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்களை பாலிவுட்டின் முன்னணி நட்சத்திரங்களாக திகழும் ஷாருக் கான் வெளியிட்டார். இந்த நிகழ்ச்சியில், அமீர்கானும் கலந்து கொண்டார். ஒரு முன்னணி நட்சத்திரத்தின் நிகழ்ச்சிக்கு மற்ற முன்னணி நடிகர்கள் கலந்துகொள்வது பெரும்பாலும் அபூர்வமான செயலாகும்.
 

 
இந்நிலையில், இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் ஷாருக் கான், “ஒரு ஹீரோவாக இருப்பதை விட ஒரு சகோதரனாக இருப்பது பெரிய விஷயமாக நான் கருதுகிறேன். ’பைஜான்’ 2015 ’ஈத்’ பண்டிக்கைக்கு வரவிருக்கிறது. எப்படி இருக்கிறது பர்ஸ்ட் லுக்?” என்று குறிப்பிட்டுள்ளார்.
 
அமீர்கான் தனது ட்விட்டர் பக்கத்தில், “விரைவில் வருகிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அமெரிக்காவில் இருந்து கோட் படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட வெங்கட் பிரபு!

துரை செந்தில்குமார் இயக்கத்தில் லெஜண்ட் சரவணன் நடிக்கும் படம் எப்போது தொடங்கும்? வெளியான தகவல்!

Show comments