Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அஜித்தை சந்திக்க முடியவில்லை… ஆனால் விரைவில் சந்திப்பேன் – ரசிகரின் கேள்விக்கு ஷாருக் கான் பதில்!

Webdunia
திங்கள், 4 செப்டம்பர் 2023 (08:04 IST)
ஷாருக்கான் நடிப்பில் தமிழ் இயக்குனர் அட்லி இயக்கும் ஜவான் திரைப்படத்தின் ஷூட்டிங் முடிந்து செப்டம்பர் 7 ஆம் தேதி ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. இந்த படத்தில் தமிழ் நடிகர்களான விஜய் சேதுபதி, நயன்தாரா மற்றும் யோகி பாபு ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

இந்த படத்தின் ப்ரி ரிலீஸ் நிகழ்ச்சி சென்னையின் பிரபல கல்லூரியில் நேற்று மாலை நடந்தது. அந்த விழாவில் ஷாருக் கான், அட்லி, விஜய் சேதுபதி மற்றும் யோகி பாபு ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்நிலையில் டிவிட்டரில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார் ஷாருக் கான். அப்போது ஒரு ரசிகர் “நீங்கள் சந்திக்க விரும்பும் தமிழ் நடிகர் யார்?” என்ற கேள்விக்கு “ரஜினி மற்றும் விஜய்யை சந்தித்து விட்டேன். ஆனால் அஜித்தை சந்திக்கும் வாய்ப்பை இழந்துவிட்டேன். ஆனால் விரைவில் சந்திப்பு நடக்கும் என நம்புகிறேன்” எனக் கூறியுள்ளார். அஜித் ஷாருக் கானோடு இணைந்து அசோகா திரைப்படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மரூன் கலர் உடையில் க்யூட்டான போஸ் கொடுத்த ரகுல் ப்ரீத் சிங்!

வெட்கத்தில் சிவக்கும் கண்கள்… ஹன்சிகாவின் க்யூட் ஆல்பம்!

நா முத்துகுமார் குடும்பத்துக்கு உதவ இசைக் கச்சேரி… இயக்குனர்கள் எடுக்கும் முன்னெடுப்பு!

அடுத்தடுத்து வந்த மரணங்கள்… காந்தாரா ரிலீஸில் மாற்றமா?- படக்குழு வெளியிட்ட அப்டேட்!

‘நாங்க இன்னும் அந்த படத்துக்குப் பேரே வைக்கல… அதுக்குள்ள…?’- விஜய் சேதுபதி பகிர்வு!

அடுத்த கட்டுரையில்
Show comments