Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அட்லி சார் நீங்கள் சொல்வது போல இது ‘மாஸ்’… தேசிய விருதுக்கு நன்றி தெரிவித்த ஷாருக் கான்!

vinoth
சனி, 2 ஆகஸ்ட் 2025 (08:53 IST)
பாலிவுட்  சூப்பர் ஸ்டார் நடிகர்களில் ஒருவரான ஷாருக்கான் நடிப்பில் தமிழ் இயக்குனர் அட்லி இயக்கிய ஜவான் திரைப்படம் கடந்த ஆண்டு செப்டம்பர் 7 ஆம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகி மிகப்பெரிய அளவில் வசூல் செய்து வருகிறது. இந்த படத்தில் தமிழ் பிரபலங்களான விஜய் சேதுபதி, நயன்தாரா மற்றும் யோகி பாபு ஆகியோர் நடித்திருந்தனர். இந்த படத்துக்கு அனிருத் இசையமைத்திருந்தார்.

இந்த படம் திரையரங்குகளின் மூலமாக சுமார் 1125 கோடி ரூபாய் வசூலித்து இருந்தது. இதையடுத்து நெட்பிளிக்ஸ் தளத்தில் இந்த படம் வெளியாகும் அங்கும் சாதனைப் படைத்து வருகிறது. அதன் பின்னர் ஓடிடியிலும் வெளியாகி மிகப்பெரிய அளவில் கவனம் ஈர்த்தது.

இந்நிலையில் நேற்று அறிவிக்கப்பட்ட 71 ஆவது தேசிய விருதுகள் பட்டியலில் சிறந்த நடிகருக்கான விருது இந்த படத்தில் நடித்ததற்காக ஷாருக் கானுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து நன்றி தெரிவிக்கும் விதமாக பேசியுள்ள ஷாருக் ‘அட்லி சார், மிகவும் நன்றி. எனக்கு இந்த படத்தைக் கொடுத்ததற்கு. நீங்கள் எப்போதும் சொல்வது போல இது ‘மாஸ்’. என்னுடைய குழுவினருக்கும் நன்றி. மேலும் என் குடும்பத்தினருக்கும் நன்றி. அவர்கள் என்னைக் குழந்தை போல வீட்டில் பார்த்துக் கொள்கிறார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இணையத்தில் பரவிய சாய் பல்லவியின் நீச்சல் உடை புகைப்படங்கள்.. சகோதரி பூஜா கொடுத்த விளக்கம்!

தனுஷின் ‘தேரே இஷ்க் மெய்ன்’ படத்தின் ரிலீஸ் தேதி பற்றி வெளியான தகவல்!

ஹாலிவுட் நடிகர்களைப் பின்னுக்குத் தள்ளி உலகின் பணக்கார நடிகர் ஆனார் ஷாருக் கான்..!

ரசிகர்களைக் கவர்ந்ததா தனுஷின் எமோஷனல் ட்ராமா ‘இட்லி கடை’… முதல் நாள் வசூல் நிலவரம்!

ஜொலிக்கும் ஜிகினா உடையில் அசத்தல் போஸில் ஜான்வி கபூர்!

அடுத்த கட்டுரையில்
Show comments