Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாகுபலி 2 படத்தின் வசூல் சாதனையை முறியடித்த ஷாருக் கானின் பதான்!

Webdunia
ஞாயிறு, 5 மார்ச் 2023 (14:27 IST)
ஷாரூக்கான், தீபிகா படுகோன், ஜான் ஆபிரகாம் உள்ளிட்ட பலர் நடித்து சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் வெளியாகியுள்ள படம் பதான். 4 ஆண்டுகள் இடைவெளியில் ஷாரூக்கான் நடித்துள்ள படம் என்பதால் இதன் மீது எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது. தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் என பல மொழிகளில் வெளியான பதான் தொடர் வசூல் சாதனையை நிகழ்த்தி வருகிறது. இந்நிலையில் இப்போது பதான் திரைப்படம் அதிகாரப்பூர்வமாக 1000 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனைப் படைத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதுபோல இந்தியாவில் மட்டும் 500 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்துள்ளது. இதுவரை இந்தியாவில் பாகுபலி 2, கேஜிஎஃப் 2 மற்றும் டங்கல் ஆகிய படங்கள் மட்டுமே இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில் இப்போது பதான் திரைப்படம் இந்தியில் மட்டும் 526 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்துள்ளது. இதன் மூலம் அதிக வசூல் செய்த இந்தி படம் என்ற சாதனையை பாகுபலி 2 விடம் இருந்து தன்வசமாக்கியுள்ளது பதான். கடந்த சில ஆண்டுகளாக தோல்விப் படங்களாக கொடுத்து வந்த ஷாருக் கானுக்கு பதான் படம் ரி எண்ட்ரி படமாக அமைந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தக் லைஃப் படத்தின் முதல் சிங்கிள் அப்டேட் கொடுத்த படக்குழு!

ஐபிஎல் முதல் போட்டி நடக்கும் ஈடன் கார்டன் மைதானத்தில் மழை?.. ரசிகர்கள் அதிருப்தி!

நாளை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் அனிருத் இசைக் கச்சேரி!

அந்த ரெண்டு படங்களோட கதையை மிக்ஸ் பண்ணா வீர தீரன் சூரன்.. அட விக்ரமே சொல்லிட்டாரே!

அண்ணன பாத்தியா.. அப்பாட்ட கேட்டியா? தமிழ் பாட்டு மாறியே இருக்கே! வைரலாகும் தாய்லாந்து பாடலின் பின்னணி!

அடுத்த கட்டுரையில்
Show comments