Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஹேராம் படத்துக்குப் பிறகு மீண்டும் இணைகிறதா கமல் ஷாருக் கூட்டணி?

Webdunia
சனி, 16 செப்டம்பர் 2023 (07:47 IST)
பாலிவுட்  சூப்பர் ஸ்டார் நடிகர்களில் ஒருவரான ஷாருக்கான் நடிப்பில் தமிழ் இயக்குனர் அட்லி இயக்கிய ஜவான் திரைப்படம் செப்டம்பர் 7 ஆம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகி மிகப்பெரிய அளவில் வசூல் செய்து வருகிறது. இந்த படத்தில் தமிழ் பிரபலங்களான விஜய் சேதுபதி, நயன்தாரா மற்றும் யோகி பாபு ஆகியோர் நடித்திருந்தனர். இந்த படத்துக்கு அனிருத் இசையமைத்திருந்தார்.

இந்த படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது. இரண்டாவது வார இறுதியில் இந்த படம் உலகம் முழுவதும் 700 கோடி ரூபாய் அளவுக்கு வசூலித்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த வெற்றியால் உற்சாகத்தில் இருக்கும் ஷாருக் கான் இயக்குனர் அட்லியோடு மீண்டும் இணைய விரும்புவதாக சொல்லப்படுகிறது. இது சம்மந்தமாக நடந்த முதல் கட்ட பேச்சுவார்த்தையில் அந்த படத்தில் நடிகர் கமல்ஹாசனையும் நடிக்க வைக்கலாம் என்றும் பேசப்படுவதாக சொல்லப்படுகிறது. ஏற்கனவே கமல்ஹாசனும் ஷாருக் கானும் ஹேராம் படத்தில் இணைந்து நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

'வசூல்ராஜா எம்பிபிஎஸ்' பட நடிகர் மரணம்? இணையத்தில் பரவும் அதிர்ச்சி தகவல்..!

அல்லு அர்ஜுன் & அட்லி இணையும் படத்தின் பட்ஜெட் இத்தனைக் கோடியா?

குட் பேட் அக்லிக்கு இருக்கும் எதிர்பார்ப்பு… முதல் நாளில் இத்தனைக் கோடி வசூலிக்க வாய்ப்பா?

பேச்சிலர் புகழ் திவ்யபாரதியின் ஸ்டன்னிங் க்யூட் போட்டோஷூட்!

இன்றிரவு 13 மாவட்டங்களில் கொட்டப்போகுது கனமழை.. வெப்பத்தில் இருந்து விடுதலை..!

அடுத்த கட்டுரையில்
Show comments