Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ட்விட்டரில் வீடியோ மூலம் ட்விட் செய்த முதல் இந்தியர் ஷாருக் கான்

ட்விட்டரில் வீடியோ மூலம் ட்விட் செய்த முதல் இந்தியர் ஷாருக் கான்
, வெள்ளி, 30 ஜனவரி 2015 (17:21 IST)
ட்விட்டரில் வீடியோ ட்விட் செய்த முதல் இந்தியர் என்ற பெருமையை ஷாருக் கான் பெற்றுள்ளார்.
பாலிவுட் நடிகர் ஷாருக் கான் அடிக்கடி ஏதாவது ஒரு புது விஷயத்தை செய்து கொண்டே இருப்பார். அது சினிமாவாக இருந்தாலும் சரி, புதிய தொழில்நுட்ப விஷயங்களாகட்டும் அதில் தன்னை முன்னிலைப்படுத்தி கொள்பவர் ஷாருக் கான். தற்போது ட்விட்டரில் ஒரு புதிய சாதனை படைத்துள்ளார்.
 
ட்விட்டரில் நேற்று வீடியோ ட்விட் செய்துள்ள ஷாருக் கான், ‘30 செகண்ட் ஓடும் இந்த வீடியோவில் அனைவருக்கும் வணக்கம் வீடியோ மூலம் உங்களை தொடர்புகொள்வது சந்தோசமாக உள்ளது. இனி உங்களுடன் வீடியோ ட்விட் மூலம் தொடர்பு கொள்ளலாம் எனக் கூறியுள்ளார்.
 
நான் நடிக்கும் புதிய படங்களின் மேக்கிங் வீடியோ உட்பட பல வீடியோக்களை உங்களுக்காக வழங்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்த புதிய அப்ளிகேஷன்  வாயிலாக வீடியோ அப்லோட் செய்வது, எடிட் செய்வது, கேப்சர் செய்வது ஆகியவை எளிதாக செய்து விடலாம் என்று கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil