ஷாருக் கான் படத்தோடு மோதும் பிரபாஸின் சலார்… புதிய ரிலீஸ் தேதி இதுதான்!

Webdunia
செவ்வாய், 26 செப்டம்பர் 2023 (06:58 IST)
பாகுபலிக்கு பிறகு ஹிட் கொடுக்க முடியாமல் பிரபாஸ் தவித்து வரும் நிலையில் சமீபத்தில் ரிலீஸான அவரின் ஆதிபுருஷ் திரைப்படம் மோசமான விமர்சனங்களையும் கேலிகளையும் சந்தித்தது. ஆனால் அடுத்து பிரபாஸ் நடிக்கும் சலார் படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. அதற்கு முக்கியக் காரணம் இந்த படத்தை இயக்குவது கே ஜி எஃப் இயக்குனர் பிரசாந்த் நீல் என்பதுதான்.  இந்த படத்தை கேஜிஎஃப் தயாரிப்பாளர் விஜய் கிரகந்தர் தயாரிக்கிறார்.

இந்த படம் செப்டம்பர் 28 ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் வி எஃப் எக்ஸ் மற்றும் கிராபிக்ஸ் பணிகள் முடியாத காரணத்தால் ரிலீஸ் தள்ளிவைக்கப்பட்டது. இதையடுத்து இப்போது டிசம்பர் 22 ஆம் தேதி கிறிஸ்துமஸ் விடுமுறையை முன்னிட்டு ரிலீஸ் ஆகவுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

அதே தேதியில் பாலிவுட் நடிகர் ஷாருக் கானின் டன்கி திரைப்படமும் ரிலீஸ் ஆக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஒரே நாளில் இரண்டு பேன் இந்தியா படங்கள் ரிலீஸ் ஆவதால் போதுமான திரையரங்குகள் கிடைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரஜினி படத்தில் இருந்து சுந்தர் சி வெளியேற இதுதான் காரணமா?.. மூத்த இயக்குனர இப்படி நடத்தலாமா?

கமல் ஒன்னும் பெரிய நடிகர்லாம் இல்லை… தேவயானியின் கணவர் ராஜகுமாரன் சர்ச்சைக் கருத்து!

அஜித் 64 படம் தொடங்குவது எப்போது?... ஆதிக் கொடுத்த அப்டேட்.!

அட்லி& அல்லு அர்ஜுன் படத்தின் ஷூட்டிங் இவ்வளவு முடிந்து விட்டதா? நடிகை கொடுத்த அப்டேட்.!

திரையுலகில் புதிய சாதனை!.. கின்னஸ் புத்தகத்தில் இடம்பெறப்போகும் ஜனநாயகன்!..

அடுத்த கட்டுரையில்
Show comments