Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டிவிட்டரில் ஜவான் பட அப்டேட்களை அள்ளித் தெளித்த ஷாருக் கான்!

Webdunia
செவ்வாய், 13 ஜூன் 2023 (07:23 IST)
பாலிவுட்  சூப்பர் ஸ்டார் நடிகர்களில் ஒருவரான ஷாருக்கான் நடிப்பில் தமிழ் இயக்குனர் அட்லி இயக்கும் ஜவான் திரைப்படத்தின் ஷூட்டிங் முடிந்து பின் தயாரிப்புப் பணிகள் நடந்து வருகின்றன. இந்த படத்தில் தமிழ் நடிகர்களான விஜய் சேதுபதி, நயன்தாரா மற்றும் யோகி பாபு ஆகியோர் நடித்துள்ளனர்.

முதலில் ஜூன் மாதம் அறிவிக்கப்பட்டு இருந்த ஜவான் ரிலீஸ் இப்போது செப்டம்பர் 7 ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது ஷாருக்கான் ஜவான் பட அப்டேட்களைக் கொடுத்துள்ளார். டிவிட்டரில் ரசிகர்களோடு நேரடியாக உரையாடலில் ஈடுபட்ட ஷாருக் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார்.

அதில் ஜவான் படம் பற்றிய கேள்விகளுக்கு பதிலாக “இன்று மாலை ஜவான் படத்தை அட்லியோடு இணைந்து பார்க்கலாம் என இருக்கிறேன்.” என ஒரு ரசிகருக்குக் கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் ”ஜவான், டங்கி ஆகிய இரு படங்களில் எது கடினமானதாக இருந்தது “ என்ற கேள்விக்கு “ஜவான் படத்தில் நிறைய ஆக்‌ஷன் காட்சிகள் உள்ளன” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மீண்டும் கலக்க வரும் சுந்தர் சி - வடிவேலு கூட்டணி.. ‘கேங்கர்ஸ்’ டிரைலர் ரிலீஸ்..!

பீரோ விழுந்ததால் பலியான பெண்.. ஆணவக்கொலை என சந்தேகம்.. பிணம் தோண்டி எடுக்கப்படுமா?

’குட் பேட் அக்லி’ படத்தில் சிம்ரன் ஆடிய அட்டகாசமான பாடல்.. தியேட்டரே ஆட்டம் போடும்..!

ரஜினி படத்தை விட ஒரு கோடி ரூபாய் அதிக பிசினஸ் செய்த விஜய் படம்.. முழு தகவல்கள்..!

’எம்புரான்’ படத்திற்கு தடை.. கேரள ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்த பாஜக..!

அடுத்த கட்டுரையில்
Show comments