Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சின்னத்திரை இயக்குநர் மீது சீரியல் நடிகை பாலியல் புகார்

Webdunia
திங்கள், 9 ஜூலை 2018 (10:36 IST)
திரையுலகில் படவாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் உள்ளது என பல நடிகைகள் கூறி வந்த நிலையில் சின்னத்திரை இயக்குநர் மீது சீரியல் நடிகை பாலியல் புகார் கொடுத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சினிமா துறையில் நடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் பழக்கும் பல வருடங்களாக இருந்து வருகிறது. ஆனால், பட வாய்ப்புகள் பாதிக்கும் என்பதால் நடிகைகள் பாலியல் அத்துமீறல்கள் குறித்து வெளியே கூறாமல் இருந்தனர்.
 
ஆனால் தற்பொழுது பல நடிகைகள் திரையுலகில் படுக்கைக்கு அழைக்கும் பழக்கத்தை தைரியமாக வெளியே கூறி வருகின்றனர்.
 
இந்நிலையில் மலையாள சீரியல் நடிகை நிஷா சாரங் என்பவர் உப்பும் மிளகாயும் என்ற காமெடி தொடரில் நீலிமா என்ற கேரக்டரில் நடித்து வந்தார். அவர் அந்த சீரியலின் இயக்குநர் உண்ணி கிரிஷ்ணன் தனக்கு பாலியல் தொல்லை அளிப்பதாகவும், இதற்கு தான் உடன்படாததால் செட்டில் தன்னை கீழ்த்தரமாக நடத்துவதாகவும் கூறியுள்ளார்.
மேலும் இதுகுறித்து தலைமை நிர்வாகியிடம் கூறியபோதும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று தெரிவித்தார். இதுபோன்ற சம்பவம் மீண்டும் நடைபெற்று வந்தால் சீரியலில் இருந்து விலகிவிடுவேன் என சேனல் நிர்வாகத்திடம் கூறியுள்ளதாக நிஷா தெரிவித்துள்ளார். நடிகையின் பாலியல் குற்றச்சாட்டு கேரள திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

விக்ரமின் ‘வீர தீர சூரன்’ ரன்னிங் டைம் இவ்வளவு தானா? சென்சார் சர்டிபிகேட் தகவல்..!

வருண் தவானை மன்னித்த பூஜா ஹெக்டே.. நடுவானில் விமானத்தில் நடந்தது என்ன?

இன்னும் 75 நாட்களில் ரிலீஸ்.. ‘தக்லைஃப்’ சூப்பர் போஸ்டரை வெளியிட்ட கமல்ஹாசன்..!

வெண்ணிற உடையில் செல்லப் பிராணியுடன் கொஞ்சி குலாவும் யாஷிகா ஆனந்த்!

திவ்யா துரைசாமியின் அழகிய புகைப்படத் தொகுப்பு!

அடுத்த கட்டுரையில்