Webdunia - Bharat's app for daily news and videos

Install App

செல்வராகவன் நடிக்கும் பகாசூரன் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம்!

Webdunia
வெள்ளி, 16 செப்டம்பர் 2022 (09:00 IST)
இயக்குனர் செல்வராகவன் கதாநாயகனாக நடிக்கும் பகாசூரன் திரைப்படத்தை மோகன் ஜி இயக்கியுள்ளார்.

திரௌபதி மற்றும் ருத்ர தாண்டவம் ஆகிய இரு படங்களும் குறைந்த பட்ஜெட்டில் எடுக்க பட்டு வியாபார ரீதியாக வெற்றி பெற்ற திரைப்படங்கள். ஆனால் அந்த படத்தின் கதைக்களம் ஒடுக்கப்பட்ட மக்களை இழிவாக சித்தரிக்கும் விதமாக அமைந்துள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. அதனால் சர்ச்சைக்குரிய ஒரு இயக்குனராகவே மோகன் ஜி பார்க்கப்படுகிறார்.

இந்நிலையில் அவரின் மூன்றாவது படத்தில் இயக்குனர் செல்வராகவன் கதாநாயகனாக நடிக்கிறார். படத்தில் நடிக்க முன்னணி நடிகரும் ஒளிப்பதிவாளருமான நட்ராஜ் ஒப்பந்தம் ஆகியிருந்தார். இந்நிலையில் சமீபத்தில் இந்த படத்தின் தலைப்பு பகாசூரன் என்று அறிவிக்கப்பட்டது. படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வந்த நிலையில் படத்தின் ரிலீஸ் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. படத்தை செப்டம்பர் மாதம் ரிலீஸ் செய்ய திட்டமிட்டு இருப்பதாக சொல்லப்பட்டது.

ஆனால் இப்போது ரிலீஸ் நவம்பர் மாதத்துக்கு மாற்றப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

ரித்திகா சிங்கின் லேட்டஸ்ட் ஸ்டன்னிங் லுக் போட்டோஷூட் ஆல்பம்!

ஸ்கின் கலர் ட்ரஸ்ஸில் ஜான்வி கபூரின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

சுதா கொங்கரா & துருவ் விக்ரம் படத்தை தயாரிப்பது யார்? வெளியான தகவல்!

ரி ரிலீஸ் பட்டியலில் இணைந்த சூர்யா & தனுஷின் சூப்பர்ஹிட் படங்கள்!

நயன்தாராவின் மலையாள பட பூஜை புகைப்படங்கள்… இணையத்தில் வைரல்!

அடுத்த கட்டுரையில்
Show comments