Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இசையும் குரலும் இணைக்கும் வரிகளாக காலம் இருக்கட்டும்.. ஜிவி பிரகாஷ்-சைந்தவி குறித்து சீனுராமசாமி

Siva
செவ்வாய், 14 மே 2024 (08:42 IST)
ஜிவி பிரகாஷ் மற்றும் சைந்தவி ஆகிய இருவரும் நேற்று திடீரென பிரிவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தது திரை உலகினர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜிவி பிரகாஷ் இசையமைப்பாளராக இருக்கும் வரை இருவருக்கும் இடையே எந்த பிரச்சனையும் இல்லை என்றும் அவர் நடிக்க தொடங்கியவுடன் தான் கருத்து வேறுபாடு அதிகரித்ததாகவும் குறிப்பாக நடிகைகளுடன் நெருக்கமாக நடிப்பதை சைந்தவி விரும்பவில்லை என்றும் இவர்களது பிரிவுக்கு இது தான் காரணமாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் ஜிவி பிரகாஷ் மற்றும் சைந்தவியை சேர்த்து வைக்க அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் முயற்சி செய்து வருவதாகவும் கூறப்பட்டு வருகிறது. ஆனால் இருவரும் பிரிவதில் உறுதியாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் ஜிவி பிரகாஷ் சைந்தவி பிரிவு குறித்து இயக்குனர் சீனு ராமசாமி தனது சமூக வலைத்தளத்தில் கூறி இருப்பதாவது:

பிரிவு விடுதலை  
இணைவு சிறை
வாழ்வில் எனில் பொறுமை
நல்ல முடிவுக்கு தெளிவு

வானம் இருக்கிறது
திசைகள் இருக்கிறது
திரும்பவும் இணையும்
ஒரு சந்தர்பத்திற்கு
நினைவை தந்து
பறக்கலாம் அவரவர் திசையில்

இசையும் குரலும்
இணைக்கும் வரிகளாக
காலம் இருக்கட்டும்

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பாரதிராஜா மகனுக்காக மோட்சதீபம் ஏற்றிய இளையராஜா.. ஆத்மா சாந்தியடைய வேண்டுதல்..!

ரைசா வில்சனின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் புகைப்பட தொகுப்பு!

பிங்க் நிற கௌனில் க்யூட்டான போஸ்களில் கலக்கும் ரகுல் ப்ரீத்!

சிறப்பாக எழுதப்பட்ட மாஸ் படம்- வீர தீர சூரனைப் பாராட்டிய கார்த்திக் சுப்பராஜ்!

அது நடந்தால்தான் ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’ இரண்டாம் பாகம் சிறப்பாக அமையும்… இயக்குனர் ராஜேஷ் அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments