Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விடுதலை படத்தில் வாத்தியாராக நடிக்க வெற்றிமாறன் என்னைதான் கேட்டார்.. சீமான் பகிர்ந்த தகவல்!

vinoth
வியாழன், 14 மார்ச் 2024 (14:45 IST)
கடந்த ஆண்டு வெளியான வெற்றிமாறன் இயக்கிய விடுதலை திரைப்படத்தின் முதல் பாகம் நேர்மறையான விமர்சனங்களையும் பாராட்டுகளையும் பெற்றது. இதையடுத்து வெற்றிமாறனின் ஹிட் பட லிஸ்ட்டில் விடுதலையும் இணைந்துள்ளது. இரண்டாம் பாகத்துக்கான ஷூட்டிங் திண்டுக்கல் மாவட்டம் சிறுமலை என்ற இடத்தில் தொடங்கி பின்னர் திருவள்ளூரில் நடைபெற்றது.

இதையடுத்து பல மாதங்களாக இரண்டாம் பாகத்துக்கான ஷூட்டிங் நடந்து வருகிறது. எப்போது முடியும் என இயக்குனருக்கே தெரியாது என்று படக்குழுவினர் புலம்பி வருகின்றனர். இந்நிலையில் இந்த படம் பற்றி சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமான் “விஜய் சேதுபதி நடித்துள்ள பெருமாள் வாத்தியார் என்ற கதாபாத்திரத்தில் நடிக்க வெற்றிமாறன் என்னைதான் முதலில் கேட்டார். ஆனால் அவர் கேட்ட அளவுக்கு என்னால் தேதிகள் ஒதுக்க முடியாததால் என்னால் நடிக்க முடியவில்லை. தம்பி விஜய் சேதுபதி சிறப்பாக நடித்துள்ளார்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

’டிடி நெக்ஸ்ட் லெவல்’ வாஷ் அவுட்.. சூரியின் மாமன் சூப்பர்ஹிட்.. சோகத்தில் சந்தானம்..!

அஜித்துடன் நடிக்க ஆசைப்படும் எஸ்.ஜே.சூர்யா.. ’தல’ சம்மதம் கிடைக்குமா?

4 படத்தில் கிடைத்த சம்பளம் ரூ.200 கோடி.. அதை அப்படியே ‘எஸ்டிஆர் 50’ல் முதலீடு செய்யும் சிம்பு..!

என் படத்தை வெளியிட தடை.. கர்நாடகா ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்த கமல்ஹாசன்..!

துஷாரா விஜயனின் ஸ்டன்னிங் கலர்ஃபுல் ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments