Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பேரறிவாளன் பரோலில் வருகை… சந்தோஷத்தில் சத்யராஜ்

Webdunia
சனி, 26 ஆகஸ்ட் 2017 (15:13 IST)
பேரறிவாளன் பரோலில் வந்திருப்பதால், சந்தோஷத்தில் இருப்பதாக நடிகர் சத்யராஜ் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.




 
ராஜிவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு, கடந்த 1991ஆம் ஆண்டு முதல் தண்டனை அனுபவித்து வருகிறார் பேரறிவாளன். இவருடன் குற்றம் சாட்டப்பட்ட முருகன், நளினி உள்பட 7 பேருக்குமே இதுவரை நீதி கிடைக்கவில்லை. இந்நிலையில், தந்தையின் உடல்நிலை சரியில்லை என்பதால், ஒரு மாத பரோலில் வெளியே வந்துள்ளார் பேரறிவாளன்.

இது தனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிப்பதாகத் தெரிவித்துள்ளார் சத்யராஜ். “என்னுடைய வாழ்க்கையில், இன்று மிகவும் சந்தோஷமான நாள். பேரறிவாளனுக்கு பரோல் கிடைத்திருக்கிறது. இது எனக்கு மகிழ்ச்சியைத் தந்தாலும், குற்றம் சாட்டப்பட்ட 7 பேருமே விடுதலை ஆகவேண்டும் என்பதுதான் என் எண்ணம்.
அய்யா குயில்தாசன், அற்புதம்மாள் உள்ளிட்ட பேரறிவாளன் குடும்பத்துடன் என் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்கிறேன். நான் தற்போது ஷூட்டிங்கிற்காக பிஜி தீவுக்கு வந்துள்ளேன். ஷூட்டிங் முடிந்து சென்னை திரும்பும் வரைக்கும் பேரறிவாளனுக்கு பரோல் இருந்தால், நிச்சயம் அவரைச் சென்று சந்திப்பேன்” எனத் தெரிவித்துள்ளார் சத்யராஜ்
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

எங்கள் படத்தை ட்ரோல் செய்தால் சிவன் நிச்சயம் தண்டிப்பார்: ‘கண்ணப்பா’ நடிகரின் சாபம்..!

விஜய்யின் ஜனநாயகன் பொங்கல் ரிலீசா? இதற்கு முன் எத்தனை படங்கள் பொங்கலில் ரிலீஸ்?

ஹோம்லி லுக்கில் கவரும் பிரியங்கா மோகனின் க்யூட் க்ளிக்ஸ்!

ஹோம்லி லுக்கில் கவரும் பிரியங்கா மோகனின் க்யூட் க்ளிக்ஸ்!

‘என் கேரியரே முடிந்துவிட்டது என்றார்கள்’.. விருது வழங்கும் நிகழ்ச்சியில் விஜய் சேதுபதி நெகிழ்ச்சி !

அடுத்த கட்டுரையில்
Show comments