Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஹரிஹர வீரமல்லு படத்தில் நான்தான் கதாநாயகி… சத்யராஜ் ‘கலகல’ பேச்சு!

vinoth
சனி, 31 மே 2025 (10:23 IST)
தெலுங்கு சினிமாவின் முக்கிய நட்சத்திரங்களில் ஒருவரான பவன் கல்யாண், தனது சினிமா கேரியரில் முதன்முறையாக 'ஹரி ஹர வீர மல்லு' என்ற பீரியட் ஆக்‌ஷன் அட்வென்ச்சர் கதையில் நடித்துள்ளார். தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் தனது புகழ்பெற்ற மெகா சூர்யா புரொடக்ஷன்ஸ் மூலம் இந்த படத்தை தயாரித்துள்ளார். இந்த படம் கடந்த நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக உருவாக்கத்தில் இருந்து இப்போது ரிலீஸை நெருங்கியுள்ளது.

17-ஆம் நூற்றாண்டில் நடக்கும் ஆக்‌ஷன் அட்வென்சர் கதை என்பதால் அதற்கேற்றவாறு சார்மினார், செங்கோட்டை மற்றும் மச்சிலிப்பட்டினம் துறைமுகம் போன்ற பிரம்மாண்டமான செட்களை அமைத்துப் படமாக்கியுள்ளனர். இந்த படத்தில் பாபி தியோல் வில்லனாக நடிக்க, சத்யராஜ் மற்றும் நிதி அகர்வால் உள்ளிட்டவர்கள் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர்.

இந்த படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய சத்யராஜ் “இந்த படத்தில் நான்தான் கதாநாயகி. டைட்டானிக் படத்தை எடுத்துக்கொண்டால் அதில் ஹீரோயினைக் காப்பாற்ற ஹீரோ போராடுவார்.  ஒரு படத்தில் ஹீரோ, யாரைக் காப்பாற்றுகிறாரோ அவர்தான் ஹீரோயின். இந்த படத்தில் பவன் கல்யாண் என்னைதான் காப்பாற்றுகிறார். அப்படியென்றால் நான்தானே ஹீரோயின்?” எனப் பேசியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

10 வருடங்கள் என்னை ஒதுக்கி வைத்திருந்தார் இளையராஜா - கங்கை அமரன் பேச்சு

கிளாமர் கேர்ள் யாஷிகாவின் அடுத்த ஆல்பம் ரிலீஸ்!

வித்தியாசமான மேக்கப்பில் க்யூட்டான போட்டோஷூட் நடத்திய பிரியா வாரியர்!

மீண்டும் ஒரு சிக்கலா?... ‘தி ராஜாசாப்’ படத்துக்கு எதிராக வழக்குத் தொடுத்த முதலீட்டு நிறுவனம்!

‘கூலி’ சுமார்… ‘வார் 2’ ரொம்ப ரொம்ப சுமார்… முதல் நாளே தெறிக்கவிட்ட இன்றைய ரிலீஸ்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments