Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் தொடங்கும் பாட்ஷா – ஆண்டனி யுத்தம்! ரசிகர்கள் எதிர்பார்ப்பு!

Webdunia
சனி, 23 நவம்பர் 2019 (19:11 IST)
ரஜினி நடித்து வெளியாகி பாக்ஸ் ஆபீஸ் வசூல் படைத்த ‘பாட்ஷா’ திரைப்படம் மீண்டும் வெளியாக இருக்கிறது.

இந்திய சினிமாவின் தவிர்க்க முடியாத அங்கமாக திகழ்பவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். அவருடைய பிறந்த டிசம்பர் 12 அன்று அவரது ரசிகர்களால் கோலாகலமாக கொண்டாடப்பட இருக்கிறது. ரஜினி நடித்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் ‘தர்பார்’.

இந்த திரைப்படம் ரஜினியின் பிறந்தநாளில் வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் பொங்கலுக்கு ரிலீஸ் செய்யப்போவதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் ரஜினிகாந்த்தின் பிறந்தநாளை சிறப்பிக்கும் விதமாக அவரது மாஸ்டர் பீஸ் படங்களில் ஒன்றான ”பாட்ஷா” படம் மீண்டும் ரிலீஸாக இருக்கிறது.

1995ம் ஆண்டு ரஜினி, ரகுவரன் இணைந்து நடித்த இந்த படமும், தேவா இசையமைப்பில் உருவான பாடல்களும் பட்டித்தொட்டியெங்கும் சக்கைப்போடு போட்டவை. ஆயுத பூஜை நேரங்களில் இன்னமும் ஆட்டோ ஸ்டாண்டுகளில் “நான் ஆட்டோக்காரன் ஆட்டோக்காரன்” பாடல் போடுவதை கேட்க முடியும்.

அப்படிப்பட்ட பாட்ஷா படத்தை மீண்டும் ரிலீஸ் செய்ய இருப்பதாக சத்யா மூவிஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனால் மீண்டும் பாட்ஷா – ஆண்டனி யுத்தத்தை திரையில் காணலாம்!

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

என்னுடைய அடுத்த படத்தில் பல ஆச்சர்யங்கள் காத்திருக்கின்றன… அட்லி கொடுத்த அப்டேட்

பொங்கலுக்கு வருகிறது சிவகார்த்திகேயனின் அடுத்த பட டைட்டில் டீசர்!

அல்லு அர்ஜுன் கைதுக்குக் காரணமான கடிதம்… ஜாமீனை ரத்து செய்ய மேல்முறையீடா?

’விடாமுயற்சி’ ரிலீஸ் தேதியை உறுதி செய்த லைகா.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

நான் எழுதிய கதைகளில் விஜயகாந்த் வில்லன்… இயக்குனர் பா ரஞ்சித் பகிர்ந்த தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments