Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜப்பானில் ரிலீஸாகும் ‘டூரிஸ்ட் பேமிலி’ திரைப்படம்!

vinoth
சனி, 17 மே 2025 (10:39 IST)
மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் ‘குட்னைட்’ மற்றுன் ‘லவ்வர்’ ஆகிய படங்களுக்கு அடுத்தப் படமாக ’டூரிஸ்ட் பேமிலி’ படம் கடந்த மே 1 ஆம் தேதி ரிலீஸானது. இந்த படத்துக்கு ரிலீஸுக்கு முன்பே நல்ல எதிர்பார்ப்பு நிலவியது. படம் ரிலீஸாகி ரசிகர்களைப் பெருமளவில் கவர்ந்த நிலையில் இதுவரை 50 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்துள்ளதாக சொல்லப்படுகிறது.

முதல் நாளில் 2 கோடி ரூபாய் அளவுக்கு வசூலித்த நிலையில் அதன் பிறகு அடுத்தடுத்த நாட்களில் 2 கோடி ரூபாய்க்குக் குறையாமல் வசூலித்து வருகிறது. இதற்கிடையில் கடந்த வாரம் சனி மற்றும் ஞாயிறு ஆகிய வார இறுதி நாட்களில் மட்டும் சுமார் 5 மற்றும் 6 கோடி ரூபாய் அளவுக்கு வசூலித்துள்ளது. அதற்கடுத்த வேலை நாட்களிலும் 2 கோடி ரூபாய்க்குக் குறையாமல் வசூலித்து வருகிறதாம்.

இந்த ஏகோபித்த வரவேற்புக் காரணமாக இந்த ஆண்டின் பிளாக்பஸ்டர் திரைப்படமாக ஆகியுள்ளது ‘டூரிஸ்ட் பேமிலி’. இதையடுத்து வரும் 24 ஆம் தேதி ஜப்பானில் இந்த படம் ரிலீஸாகவுள்ளதாகப் படக்குழு அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கிளாமர் லுக்கில் தமன்னாவின் லேட்டஸ்ட் க்யூட் போட்டோஷூட்!

நமது உண்மை… நமது வரலாறு.. ராமாயணம் படத்தின் போஸ்டரை வெளியிட்ட யாஷ்..!

மார்கோ 2 கண்டிப்பாக வரும்.. தயாரிப்பு நிறுவனம் உறுதி!

நான் சொன்னதைக் கேட்ட பாலு மகேந்திரா.. என் மேல் கோபமான வெற்றிமாறன்… இயக்குனர் ராம் பகிர்ந்த சம்பவம்!

ஸ்ரீகாந்த்& கிருஷ்ணாவின் ஜாமீன் வழக்கு…தீர்ப்பை ஒத்திவைத்த சிறப்பு நீதிமன்றம்!

அடுத்த கட்டுரையில்
Show comments