எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ரிலீஸான ‘டூரிஸ்ட் பேமிலி’… முதல் நாள் வசூல் எவ்வளவு?

vinoth
வெள்ளி, 2 மே 2025 (09:36 IST)
குட்னைட் மற்றும் லவ்வர் படங்களின் மூலம் கவனம் பெற்ற ‘மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ்’ நிறுவனம் தற்போது ஐந்து படங்களைத் தயாரித்து வருகிறது. அதில் சசிகுமார் மற்றும் சிம்ரன் ஆகியோர் நடித்துள்ள ‘டூரிஸ்ட் பேமிலி’ படமும் ஒன்று. இந்தப் படத்தை அறிமுக இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் இயக்குகிறார். ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார்.

இந்த படத்தின் டீசர் மற்றும் டிரைலர் ஆகியவை ரிலீஸாகி படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பை உருவாக்கினர். அதன் பின்னர் படக்குழுவினர் பத்திரிக்கையாளர்கள் மற்றும் திரையுலகப் பிரபலங்கள் ஆகியோருக்குப் படத்தைத் திரையிட்டுக் காட்ட அவர்கள் சொன்ன நேர்மறையான விமர்சனங்கள் கூடுதல் எதிர்பார்ப்பை உருவாக்கியது.

இதையடுத்து நேற்றுப் படம் ரிலீஸான நிலையில் பெரும்பாலும் நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றுள்ளது. இந்நிலையில் முதல் நாளில் தமிழகத்தில் மட்டும் இந்த படம் ஒரு கோடி ரூபாய் அளவுக்கு வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அடுத்தடுத்த நாட்களில் இந்த வசூல் அதிகமாகலாம் என சொல்லப்படுகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

‘அஞ்சான்’ ரீரிலீஸ்.. சூர்யா என்ன சொன்னார்? மேடையில் கடுப்பான லிங்குசாமி

சினிமாவில் இருந்து விலகுகிறேன்: ’சென்னை 28' நடிகை அறிவிப்பு.. என்ன காரணம்?

ரிவால்வர் ரீட்டாவாகவே மாறிய கீர்த்தி சுரேஷ்… விண்டேஜ் ட்ரஸ்ஸில் கூல் க்ளிக்ஸ்!

இசைக் கச்சேரியில் ஜொலிக்கும் உடையில் கலக்கும் ஆண்ட்ரியா… அசத்தல் க்ளிக்ஸ்!

வழக்கமாக சூப்பர் ஸ்டார்களின் படங்களில் ஹீரோயின்களுக்கு வேலை இருக்காது, ஆனால் … மாளவிகா மோகனன் கருத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments