Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உருவாகிறது ‘முந்தானை முடிச்சு’ ரீமேக்: பாக்யராஜ் வேடத்தில் பிரபல நடிகர்

Webdunia
புதன், 20 மே 2020 (11:11 IST)
உருவாகிறது ‘முந்தானை முடிச்சு’ ரீமே
இந்தியாவின் மிகச் சிறந்த திரைக்கதை ஆசிரியர்களில் ஒருவரான கே பாக்யராஜ் நடித்து இயக்கிய வெற்றி படங்களில் ஒன்று ’முந்தானை முடிச்சு. இந்த படம் கடந்த 1983ம் ஆண்டு வெளிவந்து சூப்பர் ஹிட்டான நிலையில் தற்போது 37 ஆண்டுகள் கழித்து இந்த படம் மீண்டும் ரீமேக் செய்ய கே பாக்யராஜ் முடிவு செய்துள்ளார்.
 
கே.பாக்யராஜ் மற்றும் ஊர்வசி முக்கிய வேடங்களில் நடித்த இந்த படத்தின் ரீமேக்கில் பாக்யராஜ் கேரக்டரில் சசிகுமார் நடிக்க உள்ளதாகவும் ஊர்வசி வேடத்தில் பிரபல முன்னணி நடிகை ஒருவர் நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. கே.பாக்யராஜ் இந்த படத்தில் நடிக்கவில்லை என்பதும் இயக்க மட்டும் உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
பல வெற்றிப்படங்களை தயாரித்த ஜே.எஸ்.பி சதீஷ் குமார் தயாரிக்கும் இந்த படத்தின் பேச்சுவார்த்தைகள் முடிந்துவிட்டதாகவும் இந்த படத்தில் நடிக்கும் மற்ற நடிகர், நடிகை குறித்த தேர்வு குறித்த ஆலோசனை நடந்து வருவதாகவும் கொரோனா வைரஸ் ஊரடங்கு உத்தரவு முடிந்த பின்னர் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் கூறப்படுகிறது
 
ஏற்கனவே ’முந்தானை முடிச்சு’ படத்தின் ரீமேக்கில் சாந்தனுவை நடிக்க வைக்க கே பாக்யராஜ் திட்டமிட்டிருந்தார். ஆனால் அந்த திட்டம் தற்போது கைவிடப்பட்டு சாந்தனுக்கு பதில் சசிகுமார் இருப்பது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

லோகேஷ் கனகராஜ் தயாரிக்கும் படத்தின் புரமோ வீடியோ.. ரஜினி பட டைட்டில்..!

பட்டுப்புடவையில் ஜொலிக்கும் மாளவிகா மோகனன்.. கார்ஜியஸ் ஆல்பம்!

யாஷிகா ஆனந்தின் லேட்டஸ்ட் வைரல் புகைப்பட ஆல்பம்!

தோனி ஸ்டைலில் ஓய்வை அறிவித்த அஸ்வின்… ரசிகர்கள் கருத்து!

ஒரே நாள்ல 1000 ஆண்களோட பண்ணனும்.. ஆபாச நடிகையின் ஆபத்தான முயற்சி! - எச்சரிக்கும் பிரபலங்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments