Webdunia - Bharat's app for daily news and videos

Install App

2 ஆண்டுகளுக்குப் பிறகு மகேஷ் பாபுவின் சர்காரு வாரி பாட்டா… டிரைலர் ரிலீஸ் எப்போது?

Webdunia
வியாழன், 28 ஏப்ரல் 2022 (15:39 IST)
மகேஷ்பாபு மற்றும் கீர்த்தி  சுரேஷ் நடிப்பில் உருவாகியுள்ள சர்காரு வாரிபட்டா படத்தின் ரிலீஸ் ஜனவரி மாதம் திட்டமிடப்பட்டது.

மகேஷ்பாபு மற்றும் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் சர்காரு வாரிபட்டா என்ற படம் இப்போது உருவாகி வருகிறது. இந்த படத்தின் முதல் லுக் போஸ்டர் சில மாதங்களுக்கு முன்னர் வெளியாகியது. இந்த படத்தின் டீசர் இணையத்தில் சில வாரங்களுக்கு முன்னர் வெளியாகி கவனத்தைப் பெற்றது.

படத்தின் ரிலிஸ் ஜனவரி மாதம் 23 ஆம் தேதி என முடிவு செய்யப்பட்டு பணிகள் நடந்தன. ஆனால் ஜனவரி மாதம் தெலுங்கில் பல பிரம்மாண்டமான பட்ஜெட் படங்கள் ரிலீஸாக உள்ளதால் சர்காரு வாரிபட்டா படத்தின் ரிலீஸை ஏப்ரல் 1 ஆம் தேதிக்கு மாற்றியுள்ளதாக படக்குழு முன்பு அறிவித்திருந்தது. இந்நிலையில் இப்போது மறுபடியும் ஒரு மாதம் தள்ளிவைக்கப்பட்டு மே 12 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என படக்குழு அறிவித்துள்ளது.

இந்நிலையில் தற்போது இந்த படத்தின் டிரைலர் ரிலீஸ் தேதி பற்றிய விவரங்கள் வெளியாகியுள்ளன. மே 2 ஆம் தேதி இதன் டிரைலர் வெளியாகும் என சொல்லப்படுகிறது. மகேஷ் பாபு நடிப்பில் படம் ரிலீஸாகி கிட்டத்தட்ட இரண்டரை ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்ட நிலையில் பயங்கர எதிர்பார்ப்புகளோடு இந்த படம் ரிலீஸாகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இன்னொரு ‘காவாலா’ பாடலா? ரசிகர்களுக்கு விருந்தாகும் தமன்னாவின் கிளாமர் டான்ஸ்..!

பர்ப்பிள் கலர் ட்ரஸ்ஸில் கலக்கல் போஸ் கொடுத்த திவ்யபாரதி!

கார்ஜியஸ் லுக்கில் கலக்கலான உடையில் மிருனாள் தாக்கூர்… !

ஒழுங்கா இருந்திருந்தா ரசிகர் மன்றம் நடத்திருக்கலாம்… இப்படி பண்றீங்களேடா- ரசிகர்களைக் கண்டித்தசுரேஷ் சந்திரா!

’குட் பேட் அக்லி’ ரிசல்ட் பத்தி கவலையில்லை.. அடுத்த கார் போட்டிக்கு தயாராகும் அஜித்..!

அடுத்த கட்டுரையில்
Show comments