Webdunia - Bharat's app for daily news and videos

Install App

'சர்கார்' டீசர் ரிலீஸ் தேதி: 'மெர்சல் சாதனையை முறியடிக்க விஜய் ரசிகர்கள் திட்டம்

Webdunia
புதன், 10 அக்டோபர் 2018 (12:27 IST)
விஜய் நடித்த 'சர்கார்' திரைப்படத்தின் டீசர் வரும் ஆயுதபூஜை நாளில் வெளியாகும் என ஏற்கனவே செய்திகள் வெளிவந்து கொண்டிருந்த நிலையில் தற்போது அந்த செய்தி உறுதியாகியுள்ளது. ஆம், வரும் 19ஆம் தேதி மாலை 6 மணிக்கு 'சர்கார்' டீசர் ரிலீஸ் ஆகவிருப்பதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

யூடியூபில் இதுவரை அதிக பார்வையாளர்களை கொண்ட டீசர் என்ற பெருமையை 'மெர்சல்' படத்தின் டீசர் தக்க வைத்துள்ளது. இந்த சாதனையை இன்னும் எந்த படத்தின் டீசரும் முறியடிக்காத நிலையில் தங்கள் சாதனையை தாங்களே முறியடிக்க விஜய் ரசிகர்கள் திட்டமிட்ட்டுள்ளனர்.

அதன்படி சன் பிக்சர்ஸ் வெளியிடும் அதிகாரபூர்வ சர்கார் டீசர்  வீடியோவை தவிர வேறு எந்த லிங்க்கையும் ஷேர் செய்ய வேண்டாம் என இப்போதே விஜய் ரசிகர்கள் திட்டமிட்டுள்ளனர். 'மெர்சல்' சாதனையை முறியடித்து இணையத்தில் தாங்கள் அசைக்க முடியாத இடத்தில் இருப்பதை நிரூபிக்க வேண்டும் என்று திட்டமிடும் விஜய் ரசிகர்களின் எண்ணம் ஈடேறுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

வெற்றியையும் தோல்வியையும் பார்த்துள்ளேன்: 33 வருட சினிமா பயணம் குறித்து அஜித் அறிக்கை..!

அஜித்தை திடீரென சந்தித்த ஏ.ஆர்.முருகதாஸ், சிறுத்தை சிவா, ஆதிக் ரவிச்சந்திரன்.. என்ன காரணம்?

மோசமான விமர்சனங்கள் வந்தும் வசூலில் அள்ளும் ‘கிங்டம்’… முதல் வார இறுதி கலெக்‌ஷன் ரிப்போர்ட்!

AI மூலமாக ராஞ்சனா க்ளைமேக்ஸ் மாற்றம்… இயக்குனரைத் தொடர்ந்து தனுஷும் அதிருப்தி!

டாப் குக்கு டூப் குக்கு சீசன் 2.. ஷிவாங்கி தான் தொகுப்பாளினி.. குக்குகள் யார் யார்?

அடுத்த கட்டுரையில்
Show comments