Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வலுக்கும் எதிர்ப்புகள்… அண்ணாச்சி படத்தில் பாடலில் மாற்றம்!

Webdunia
செவ்வாய், 26 அக்டோபர் 2021 (17:49 IST)
ஜெலண்ட் அண்ணாச்சி இப்போது பிரம்மாண்டமாக ஒரு படத்தில் நடித்து வருகிறார்.

சரவணா ஸ்டோர் அண்ணாச்சி அருள்சரவணனுக்கு திடீரென ஹீரோ ஆசை ஏற்படவே தனது நிறுவன விளம்பரங்களில் தானே நடிக்க ஆரம்பித்தார். அதனால் பலர் அவரை ட்ரோல் செய்ய ஆரம்பித்தனர். ஆனாலும் விடாது எல்லா விளம்பரங்களிலும் அவரே நடித்தார். இதையடுத்து தன்னை அடுத்த கட்டத்துக்கு உயர்த்தும் முயற்சியாக ஒரு படத்தில் கதாநாயகனாக நடிக்க ஒப்பந்தம் ஆனார். அந்த படத்தை அவரை வைத்து விளம்பரப் படங்களை இயக்கிய ஜேடி ஜெர்ரி இயக்குனர்கள் இயக்கி வருகின்றனர். இசைக்கு ஹேரிஸ் ஜெயராஜ், பாடலுக்கு வைரமுத்து என முன்னணிக் கலைஞர்களை படத்துக்கு ஒப்பந்தம் செய்துள்ளார் அண்ணாச்சி.

இந்த படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு நடந்து வருகிறது. இந்நிலையில் படத்தில் ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் மதன் கார்க்கி எழுதியுள்ள ஒரு பாடலை பாட சிங்கள பாடகி ஒருவரை தேர்வு செய்துள்ளார்களாம். இவர் யாரென்றால் இலங்கைப் போரின் போது சிங்கள ராணுவத்தில் பணியாற்றிய ராணுவ வீரர் ஒருவரின் மகளாம். அதனால் அவர் அந்த பாடலைப் பாடக்கூடாது என எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.

இதையடுத்து இப்போது அந்த பாடல் இப்போது வேறு ஒருவரின் குரலில் பதிவு செய்யப்பட்டு அதுதான் படத்தில் இடம்பெறும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பாரதிராஜா மகனுக்காக மோட்சதீபம் ஏற்றிய இளையராஜா.. ஆத்மா சாந்தியடைய வேண்டுதல்..!

ரைசா வில்சனின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் புகைப்பட தொகுப்பு!

பிங்க் நிற கௌனில் க்யூட்டான போஸ்களில் கலக்கும் ரகுல் ப்ரீத்!

சிறப்பாக எழுதப்பட்ட மாஸ் படம்- வீர தீர சூரனைப் பாராட்டிய கார்த்திக் சுப்பராஜ்!

அது நடந்தால்தான் ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’ இரண்டாம் பாகம் சிறப்பாக அமையும்… இயக்குனர் ராஜேஷ் அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments