Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நடித்தால் நயன்தாராவுடன் தான்: அடம்பிடிக்கும் சரவணா ஸ்டோர் உரிமையாளர்!

நடித்தால் நயன்தாராவுடன் தான்: அடம்பிடிக்கும் சரவணா ஸ்டோர் உரிமையாளர்!

Webdunia
சனி, 15 ஏப்ரல் 2017 (14:00 IST)
சரவணா ஸ்டோர் உரிமையாளர் சரவணன் சினிமாவில் நடிக்க இருப்பதாகவும், தன்னுடைய முதல் படத்திலேயே நயன் தாரவுடன் தான் ஜோடி சேர்ந்து நடிப்பேன் எனவும் கூறியதாக தகவல்கள் வருகின்றன.


 
 
சமீப காலமாக சரவணா ஸ்டோர் விளம்பரங்கள் அனைத்திற்கும் அதன் உரிமையாளர் சரவணன் தான் விளம்பர மாடலாக வருகிறார். பிரபல முன்னணி நடிகைகளான தமன்னா, ஹன்சிகா உடன் விளம்பரங்களில் நடித்து வருகிறார் சரவணன்.
 
இவரது விளம்பரங்களை ஏற்கனவே சமூக வலைதளங்களில் கலாய்த்தும், விமர்சித்தும் வந்தனர் நெட்டிசன்கள். இந்நிலையில் அவர் சினிமாவில் நடிக்க இருப்பதாக வந்த தகவலை அடுத்து நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் அவரை கலாய்க்க ஆரம்பித்துள்ளனர்.
 
விரைவில் தான் சினிமாவில் நடிக்க உள்ளதாகவும், தான் ஹீரோவாக நடிக்கும் முதல் படத்துக்கு நயன்தாராவுடன் தான் ஜோடி சேருவேன் எனவும் கூறியுள்ளார் சரவணன். இன்று திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்து விட்டு 1 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க வேல் காணிக்கையாக வழங்கிய அவர் தன்னுடைய சினிமா பிரவேசம் குறித்து செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சினிமா தொழிலாளிகளுக்கு வீடு.. மொத்த செலவையும் ஏற்ற விஜய் சேதுபதி! - FEFSI அளித்த கௌரவம்!

மாடர்ன் உடையில் ஐஸ்வர்யா ராஜேஷின் அழகிய புகைப்படங்கள்!

ரசிகர்களை இசை மழையில் நனைய வைத்த ஆண்ட்ரியா… கலக்கல் போட்டோஸ்!

டிராகன் படத்தில் இரண்டு நாள் கலெக்‌ஷன் இத்தனைக் கோடியா?... ஆச்சர்யப்பட வைக்கும் வசூல்!

பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் படம்… முக்கிய அப்டேட்டை வெளியிட்ட தயாரிப்பு நிறுவனம்!

அடுத்த கட்டுரையில்
Show comments