Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கலைமாமணி விருது பெற்றவர்களுக்கு சரத்குமார் வாழ்த்து!

கலைமாமணி
Webdunia
ஞாயிறு, 21 பிப்ரவரி 2021 (15:32 IST)
சமீபத்தில் தமிழக அரசு கலைமாமணி விருதினை வெளியிட்டிருந்த நிலையில் சிவகார்த்திகேயன் ஐஸ்வர்யா ராஜேஷ் யோகி பாபு உள்பட பலருக்கு கலைமாமணி விருது அறிவிக்கப்பட்டது. மேலும் இந்த விருதுகள் நேற்று தமிழக முதல்வரால் அளிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் கலைமாமணி விருது பெற்றவர்களுக்கு தனது நல்வாழ்த்துக்களை நடிகரும் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவருமான சரத்குமார் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;
 
தமிழக அரசு சார்பில்‌ திரைத்துறை உட்பட பல்வேறு துறைகளில்‌ சிறந்து விளங்குவோருக்கு ஆண்டுதோறும்‌ கலைமாமணி விருது வழங்கப்பட்டு வருவதில்‌, 2019, 2020 ஆண்டிற்கான கலைமாமணி விருது பெறவிருக்கும்‌ பழம்பெரும்‌ நடிகை சரோஜாதேவி, சவுக்கார்ஜானகி, நடிகை ஐஸ்வர்யாராஜேஷ்‌, நடிகர்‌ சிவகார்த்திகேயன்‌, தயாரிப்பாளர்‌ கலைப்புலி தாணு. ஐசரிகணேஷ்‌, இயக்குனர்‌ கெளதம்மேனன்‌ இசையமைப்பாளர்‌ டி இமான்‌, சண்டை பயிற்சியாளர்‌ ஜாக்குவார்‌ தங்கம்‌ உள்பட அனைத்து திரைப்படத்துறை கலைஞர்களுக்கும்‌ என் நல்வாழ்த்துகளை தெரிவித்துக்‌ கொள்கிறேன்‌.
 
குறிப்பாக என்னுடன்‌ 27 ஆண்டுகளாக பயணிக்கும்‌ பி.ஆர்.ஓ திருசிங்காரவேலு அவர்களுக்கு விருது அறிவிக்கப்பட்டிருப்பதில்‌ மகிழ்கிறேன்‌. தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ப பற்பல புதிய படைப்புகளுடன்‌ சாதனைகள்‌ புரிந்து திரைத்துறையை மென்மேலும்‌ வளர்ச்சியடைய செய்யவும்‌ வாழ்த்துகிறேன்‌.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

க்ரீத்தி ஷெட்டியின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

பிங்க் நிற உடையில் கூல் லுக்கில் கலக்கும் கௌரி கிஷன்!

இரண்டே நாளில் 100 கோடி ரூபாய் வசூல்.. எம்புரான் படக்குழு அறிவிப்பு!

மனோஜ் பாரதிராஜா மறைவு பற்றி அவதூறு பரப்பாதீர்கள்.. இயக்குனர் பேரரசு ஆதங்கம்!

இரண்டாவது நாளில் சரிந்த மோகன்லாலின் எம்புரான் கலெக்‌ஷன்!

அடுத்த கட்டுரையில்
Show comments