பொன்னி நதி பாடலை பாடிய நடிகர் விஜய்! – சரத்குமார் சொன்ன புது தகவல்!

Webdunia
புதன், 28 செப்டம்பர் 2022 (12:25 IST)
பொன்னியின் செல்வனில் வரும் பொன்னி நதி பாடலை விஜய் பாடினார் என நடிகர் சரத்குமார் கூறியுள்ளார்.

கல்கி எழுதி புகழ்பெற்ற நாவலான பொன்னியின் செல்வனை நீண்ட கால முயற்சிக்கு பின் படமாக எடுத்துள்ளார் மணிரத்னம். இந்த படத்தில் விக்ரம், கார்த்தி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், ஜெயம்ரவி, ஜெய்ராம் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

இந்த படம் 30ம் தேதி வெளியாக உள்ள நிலையில் படத்தின் ப்ரொமோஷன் பணிகளில் படக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்த படத்தில் நடிகர் சரத்குமார், பெரிய பழுவேட்டரையர் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.

ALSO READ: ரசிகருக்கு ‘பளார்’ அறை குடுத்த நடிகை! – சர்ச்சை வீடியோ குறித்து விளக்கம்!

ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் பேசிய அவர், நடிகர் விஜய் பொன்னியின் செல்வனில் வரும் ‘பொன்னி நதி’ பாடலை அடிக்கடி பாடிக் கொண்டே இருப்பார் என கூறியுள்ளார். சரத்குமார், விஜய்யுடன் வாரிசு படத்தில் நடித்து வருகிறார்.

மணிரத்னம் பொன்னியின் செல்வன் படத்தை முதலில் எடுக்க முயன்றபோது விஜய்யை வந்தியத்தேவனாக நடிக்க வைக்க விரும்பினார் என்ற பேச்சு உண்டு. அதனால் வந்தியத்தேவனாக விஜய்யை எடிட் செய்து பலர் சமூக வலைதளங்களில் கூட பதிவிட்டனர். இந்நிலையில் விஜய்யே வந்தியத்தேவனின் பொன்னி நதி பாடலை பாடியிருப்பது சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இந்த பக்கம் ரஜினி.. அந்தப் பக்கம் கமல்! ‘ஹாய்’ படத்தில் ஸ்பெஷல் போஸ்டரை வெளியிட்டு நயனுக்கு வாழ்த்து

தேர்தல் தோல்வி எதிரொலி: பீகாரை விட்டு வெளியேறுகிறாரா பிரசாந்த் கிஷோர்?

அவர் சொன்ன வார்த்தையை சொல்லவா? கானா வினோத்தை கடுமையாக சாடும் திவாகர்

என்னுடைய மார்பிங் படத்தை என் மகன் பார்த்தால் என்ன நினைப்பான்? பிரபல நடிகை வருத்தம்..!

தாய்மார்களுக்கு 8 மணி நேர வேலை.. குழந்தையை அலுவலகத்திற்கு அழைத்து வர அனுமதி: தீபிகா படுகோன்

அடுத்த கட்டுரையில்
Show comments