Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

24 படத்தில் நடிக்கும் சரண்யா, சத்யன்

24 படத்தில் நடிக்கும் சரண்யா, சத்யன்
, புதன், 22 ஏப்ரல் 2015 (14:17 IST)
விக்ரம் குமார் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் 24 படத்தின் படப்பிடிப்பு மும்பையில் தொடங்கி தொடர்ந்து நடந்து வருகிறது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்கிறார். தயாரிப்பு சூர்யாவின் 2டி என்டர்டெய்ன்மெண்ட்.
 

 
இந்தப் படத்தில் ஹீரோயினாக சமந்தா ஒப்பந்தம் செய்யப்பட்டு நடித்து வருகிறார். மேலும், சரண்யா பொன்வண்ணன் மற்றும் சத்யனும் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். 
 
24 என்ற அமெரிக்க தொலைக்காட்சி தொடரின் இந்திய உரிமையை அனில் கபூர் வாங்கியுள்ளார். அதே பெயரில் இப்படம் தயாராவதால் 24 என்ற பெயரை மாற்றும்படி அவர் சூர்யாவை வற்புறுத்தி வருகிறார். பெயரை மாற்றவில்லை எனில் நீதிமன்றம் செல்லவிருப்பதாகவும் அனில் கபூர் தரப்பு கூறியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil