Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பேபி சாராவா இது… புகைப்பிடிக்கும் போட்டோவை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள்!

Webdunia
செவ்வாய், 7 பிப்ரவரி 2023 (09:53 IST)
இயக்குனர் விவேக் இயக்கும் கொடேஷன் கேங் படத்தில் பிரியாமணி மற்றும் சாரா அர்ஜுன் ஆகியோர் முக்கியமானக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

அருண் விஜய் மற்றும் ரித்திகா சிங் ஆகியோர் நடிக்க பாக்ஸர் படத்தை இயக்க ஒப்பந்தமானார் இயக்குனர் விவேக். ஆனால் அந்த படம் பல காரணங்களால் தாமதமாகவே இப்போது ப்ரியா மணி மற்றும் தெய்வதிருமகள் சாரா அர்ஜுன் நடிக்கும் கொடேஷன் கேங் எனும் கேங்ஸ்டர் படத்தை இயக்கி வருகிறார்.

இந்த படத்தில் சாரா அர்ஜுன் கல்லூரி மாணவியாக பழிவாங்கும் எண்ணம் கொண்டவராக நடிக்கிறார் என்றும் இந்த திரைப்படம் அவரது சினிமா வாழ்க்கையில் திருப்புமுனையாக அமையும் எனவும் தெரிவித்துள்ளார் இயக்குனர் விவேக். இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவதும் மும்பையில் நடக்க உள்ளதாக தெரிகிறது.

இந்நிலையில் இப்போது இந்த படத்தின் சில ஸ்டில்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. அந்த ஸ்டில்களில் சாரா புகைப்பிடித்தபடி இருக்கும் ஸ்டில்கள் ரசிகர்களை அதிர்ச்சி அடையச் செய்துள்ளன. குழந்தை நட்சத்திரமாக ரசிகர்களுக்கு பழக்கமான சாராவின் இந்த மாற்றம் ரசிகர்களால் எளிதில் ஏற்றுக்கொள்ள முடியாததாக அமைந்துள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

சமுத்திரக்கனியின் ராமம் ராகவம் படம் பெரும் வெற்றியடையும் - இயக்குனர் பாலா.

கவின்+யுவன்+இளன் கூட்டணியின் இளமை ததும்பும் 'ஸ்டார்' பட முன்னோட்டம்!

பிடிச்சு இழுக்கத்தான் செய்யும், உதைச்சு தள்ளிட்டு மேல வரணும்: கவின் நடித்த ’ஸ்டார்’ டிரைலர்..!

'ராபர்' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை- நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டார்!

வசூலிலும் வரவேற்பிலும் பட்டய கிளப்பும் "ரத்னம்" விஷாலின் ரசிகர்கள் உற்சாகம்.

அடுத்த கட்டுரையில்
Show comments