Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

விஜய் படத்துக்கு இசையமைக்கும் சந்தோஷ் நாராயணன்

விஜய் படத்துக்கு இசையமைக்கும் சந்தோஷ் நாராயணன்
, வியாழன், 26 நவம்பர் 2015 (15:06 IST)
சமீபத்தில் தமிழ் சினிமாவுக்கு கிடைத்த நல்ல இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன். இசையமைக்கும் அனைத்துப் படங்களிலும் தனது கையெழுத்தை அழுத்தமாகப் போடுகிறவர். கபாலி படத்துக்கு இசையமைத்துவரும் அவர் அடுத்து விஜய் படத்துக்கு இசையமைக்கிறார்.


 
 
அட்லி இயக்கத்தில் தெறி படத்தில் நடித்துவரும் விஜய் அடுத்து, அழகிய தமிழ் மகன் இயக்குனர் பரதனின் இயக்கத்தில் நடிக்கிறார். விஜயா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு மதி ஒளிப்பதிவு செய்ய, பிரவீன் கே.எல். எடிட்டிங் செய்கிறார்.
 
இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைப்பார் என உறுதி செய்யப்படாத தகவல்கள் கூறுகின்றன.

Share this Story:

Follow Webdunia tamil