Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாண்டிராஜ் –விஜய் சேதுபதி கூட்டணியின் படத்துக்கு இவர்தான் இசையமைப்பாளரா?

vinoth
வெள்ளி, 28 பிப்ரவரி 2025 (09:26 IST)
இயக்குனர் பாண்டிராஜ் தமிழ் சினிமாவின் முக்கியமான கமர்ஷியல் இயக்குனர்களில் ஒருவர். பசங்க படத்தின் மூலம் அறிமுகமான அவர் அடுத்தடுத்து இயக்கிய கடைகுட்டி சிங்கம், நம்ம வீட்டுப் பிள்ளை போன்ற திரைப்படங்கள் பெரியளவில் வெற்றியைப் பெற்றன. கடைசியாக அவர் இயக்கிய ‘எதற்கும் துணிந்தவன்’ திரைப்படம் 2022 ஆம் ஆண்டு ரிலீஸாகி தோல்வி படமாக அமைந்தது.

இதனால் பாண்டிராஜ் தன்னுடைய அடுத்த படத்தின் திரைக்கதையை உருவாக்க ஒரு இடைவெளி எடுத்துக்கொண்டார். திரைக்கதையை எழுதி முடித்த பாண்டிராஜ் இப்போது விஜய் சேதுபதி நடிப்பில் சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் அந்த  கதையை இயக்கி வருகிறார். நித்யா மேனன் கதாநாயகியாக நடக்கிறார். யோகி பாபு மற்றும் சரவணன் உள்ளிட்டவர்கள் மற்ற முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

சமீபத்தில் இந்த படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த படத்துக்கு இசையமைப்பாளராக சந்தோஷ் நாராயணன் ஒப்பந்தம் ஆகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.விரைவில் இது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என சொல்லப்படுகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கிளாமர் இளவரசி ஜான்வி கபூரின் லேட்டஸ்ட் அழகிய போட்டோஷூட் ஆல்பம்!

குக் வித் கோமாளி சீசன் 6 எப்போது? புதிய கோமாளிகள் பங்கேற்பார்களா?

கிளாமர் இளவரசி ஜான்வி கபூரின் லேட்டஸ்ட் அழகிய போட்டோஷூட் ஆல்பம்!

தனுஷுக்கு வில்லனாகும் பிரபல மலையாள நடிகர்… அர்ஜுன் வேற இருக்காரா? – வெளியான தகவல்!

ஹரிஷ் கல்யாணின் அந்த படத்தைப் பார்த்த இயக்குனர் வெற்றிமாறன்..! என்ன சொன்னார் தெரியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments