Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முருகதாஸ் & சல்மான் கான் படத்தில் சந்தோஷ் நாராயணன்..!

vinoth
செவ்வாய், 17 டிசம்பர் 2024 (09:47 IST)
தர்பார் தோல்விக்குப் பிறகு மூன்று ஆண்டுகள் எந்த படமும் இயக்காமல் இருந்த ஏ ஆர் முருகதாஸ், இப்போது சிவகார்த்திகேயனை வைத்து தனது அடுத்த படத்தைத் தொடங்கியுள்ளார். இந்த படத்தின் ஷூட்டிங் கடந்த மாதம் சென்னையில் தொடங்கியது. படத்தில் கதாநாயகியாக ருக்மினி வசந்த் நடிக்க அனிருத் இசையமைக்கிறார்.

இந்த படத்துக்கு இடையிலேயே முருகதாஸ் அடுத்து பாலிவுட் சூப்பர் ஸ்டார் நடிகர்களில் ஒருவரான சல்மான் கானோடு இணைந்து சிக்கந்தர் என்ற படத்தை உருவாக்க உள்ளார். இந்த படத்தின் பட்ஜெட் 400 கோடி ரூபாய்க்கு மேல் என சொல்லப்படுகிறது. இந்த படம் அடுத்த ஆண்டு ரம்ஜானுக்கு ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. தற்போது இந்த படத்துக்காக மும்பையிலேயே முகாமிட்டு முருகதாஸ் படத்தின் பணிகளை மேற்பார்வையிட்டு வருகிறார்.

இந்நிலையில் இந்த படத்தின் பின்னணி இசைப் பணிகளுக்காக சந்தோஷ் நாராயணன் ஒப்பந்தம் ஆகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் முதல் முறையாக நேரடி பாலிவுட் படத்துக்கு இசையமைக்க உள்ளார் சந்தோஷ்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

எனக்கு நிறைய பேர் பாலியல் தொல்லை அளித்திருக்கின்றார்கள்: பாடகி ஜொனிதா காந்தி அதிர்ச்சி தகவல்..!

மாளவிகா மோகனனின் வைரல் க்யூட் போட்டோஸ்!

ஷிவானியின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

50 கோடி ரூபாய் வசூலுக்கே திணறும் ‘தக் லைஃப்’… விடுமுறை நாட்களில் கூட சுணக்கம்!

நான் சினிமாவுக்கு வந்த காரணம் முழுமையடைந்ததாக உணர்கிறேன்… ரஜினி பாராட்டால் நெகிழ்ந்த அபிஷன் ஜீவிந்த்!

அடுத்த கட்டுரையில்
Show comments