Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தனுஷ் மிகச்சிறந்த பாப் கலைஞர்… சந்தோஷ் நாராயணன் புகழாரம்!

Webdunia
திங்கள், 14 ஜூன் 2021 (16:44 IST)
இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தனுஷ் மிகச்சிறந்த பாப் கலைஞர் என புகழ்ந்துள்ளார்.

தனுஷ் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில ஜகமே தந்திரம் படம் தயாராகி ஜூன் 18 ஆம் தேதி நெட்பிளிக்ஸில் வெளியாக உள்ளது. வொய் நாட் ஸ்டுடியோஸ் நிறுவனம் மற்றும் ரிலையன்ஸ் என்டேர்டைன்மெண்ட்ஸ் நிறுவனம் இணைந்து இப்படத்தினை தயாரிக்கின்றனர். தனுஷிற்கு ஜோடியாக மலையாள நடிகை ஐஸ்வர்யா லக்ஷ்மி இப்படத்தில் நடிக்கின்றனர். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இப்படத்தில் பிரபல ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ  மற்றும் மலையாள நடிகர் ஜோஜு ஜார்ஜ் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.

இந்த படத்தின் இசையமைப்பாளர் படம் சம்மந்தப்பட்ட ப்ரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு பேசினார். அப்போது ‘இந்த படத்தில் தனுஷ் பாடல்கள் எழுதி பாடியுள்ளது சிறப்பாக வந்துள்ளது. நான் எப்போதுமே அவரிடம் ‘நீங்கள் மிகச்சிறந்த பாப் கலைஞர்’ எனக் கூறுவேன். அவருக்கு இளைஞர்களுக்கு என்ன பிடிக்கிறது என்பது தெரிந்திருக்கிறது. இந்த படத்தின் இசைக்கு அவர்தான் எனக்கு உந்துதல்’ என புகழ்ந்து பேசியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

சந்தானம் நடிக்கும் ‘இங்க நான் தான் கிங்கு’ - திரைப்பட ரசிகர்கள் சந்திப்பு விழா!

விஜய் சேதுபதியின் 51வது படத்தின் டைட்டில் இதுவா? நாளை அதிகாரபூர்வ அறிவிப்பு..!

படிக்கிற பொண்ணை படுக்க கூப்பிடும் அளவுக்கு தைரியம் வந்துருச்சா.. ‘பிடி சார்’ டிரைலர்..!

என்ன வெச்சு நீங்க வீடியோ பண்ணுன நேரத்துல.. நான் என்ன பண்ணேன் தெரியுமா? – இளையராஜா வெளியிட்ட வீடியோ!

இவ்வளவு சொல்லியும் கேட்கவில்லையா? யூடியூப் சேனல்கள் குறித்து வருத்தம் தெரிவித்த ஜிவி பிரகாஷ்..!

அடுத்த கட்டுரையில்
Show comments