Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இதுக்கு ரிப்ளை பண்ணி உங்களை அசிங்கப்படுத்தனுமா? சாந்தனுவின் பதிலடி

Webdunia
வெள்ளி, 21 ஜூன் 2019 (20:27 IST)
தளபதி விஜய்யின் 63வது படமான 'பிகில்' ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரை எந்த அளவுக்கு அவரது ரசிகர்கள் ரசித்து வருகின்றார்களோ, அதேபோல் கோலிவுட் திரையுலகினர்களும் இந்த ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் குறித்து கருத்து கூறி வருகின்றனர். இந்த நிலையில் விஜய்யின் வெறித்தனமான ரசிகர்களில் ஒருவராகிய சாந்தனு பாக்யராஜ் தனது டுவிட்டர் பக்கத்தில் பிகில் குறித்து தனது கருத்தை பதிவு செய்துள்ளார்.
 
'வெறித்தனம்', 'பிளாக்பஸ்டர்', பிகில் அடிச்சா செவிலு கிழியும். விஜய் அண்ணாவின் செகண்ட் லுக்கை எதிர்பார்க்கவே இல்லை. இந்த ஒரு லுக்கே மாஸ். பட்டையை கிளப்புங்க அட்லி' என்று சாந்தனு பாக்யராஜ் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.
 
சாந்தனுவின் இந்த பதிவுக்கு கமெண்ட் பகுதியில் ஒரு டுவிட்டர் பயனாளி, 'என் பொண்டாட்டிய கூட நான் இப்படி ரசிச்சதில்லை' அத சொல்ல மறந்துட்டிங்களே' என்று கிண்டல் செய்துள்ளார். இதற்கு பதிலடி கொடுத்த சாந்தனு, 'இதுக்கு நான் ரிப்ளை பண்ணி உங்கள ஏன் அசிங்கப்படுத்தனும்' என்று கூறியுள்ளார். சாந்தனுவின் இந்த பதிலடிக்கு ஆதரவு குவிந்து வருகிறது. ஒருசிலர் மட்டும் சாந்தனுவை குறைகூறி வருகின்றனர்.
 
விஜய்யின் 'சர்கார்' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் வந்தபோது, 'என் பொண்டாட்டிய கூட நான் இப்படி ரசிச்சதில்லை' என்று சாந்தனு கமெண்ட் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மீண்டும் கலக்க வரும் சுந்தர் சி - வடிவேலு கூட்டணி.. ‘கேங்கர்ஸ்’ டிரைலர் ரிலீஸ்..!

பீரோ விழுந்ததால் பலியான பெண்.. ஆணவக்கொலை என சந்தேகம்.. பிணம் தோண்டி எடுக்கப்படுமா?

’குட் பேட் அக்லி’ படத்தில் சிம்ரன் ஆடிய அட்டகாசமான பாடல்.. தியேட்டரே ஆட்டம் போடும்..!

ரஜினி படத்தை விட ஒரு கோடி ரூபாய் அதிக பிசினஸ் செய்த விஜய் படம்.. முழு தகவல்கள்..!

’எம்புரான்’ படத்திற்கு தடை.. கேரள ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்த பாஜக..!

அடுத்த கட்டுரையில்
Show comments