Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வடக்குப்பட்டி ராமசாமி படத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட பிரபல தயாரிப்பாளர்!

vinoth
வெள்ளி, 26 ஜனவரி 2024 (07:36 IST)
நடிகர் சந்தானம் கதாநாயகனாக நடித்து முடித்துள்ள திரைப்படம் வடக்குப்பட்டி ராமசாமி. முழுக்க முழுக்க காமெடி அம்சம் கொண்ட இந்த படத்தை கார்த்திக் யோகி இயக்கி உள்ளார் என்பதும் ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் வெளியான இந்த டிரைலரில் மறைந்த திராவிடர் கழக தலைவர் பெரியாரை நக்கல் செய்வது போல சில வசனங்கள் இடம்பெற்றிருந்தன. இந்த டிரைலர் வெளியானதில் இருந்து சமூகவலைதளத்தில் பெரியாரிய ஆதரவாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும் இந்த படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிடுவது மேலும் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.  சர்ச்சைகளை அடுத்து இப்போது படத்தை ரெட் ஜெயண்ட் நிறுவனம் வெளியிடுவதில் இருந்து விலகியுள்ளது.

இந்நிலையில் இந்த படத்தின் தமிழ்நாடு திரையரங்க விநியோக உரிமையை முதலில் டிரைடண்ட் ஆர்ட்ஸ் ரவிந்தரன் கைப்பற்றி இருந்ததாகவும், ஆனால் ரெட் ஜெயண்ட் நிறுவனம் உள்ளே வந்ததும், அவருக்கு கர்நாடக திரையரங்க உரிமையைக் கொடுத்து தயாரிப்பு நிறுவனம் வெளியேற்றி விட்டதாகவும் சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

எங்கள் படத்தை ட்ரோல் செய்தால் சிவன் நிச்சயம் தண்டிப்பார்: ‘கண்ணப்பா’ நடிகரின் சாபம்..!

விஜய்யின் ஜனநாயகன் பொங்கல் ரிலீசா? இதற்கு முன் எத்தனை படங்கள் பொங்கலில் ரிலீஸ்?

ஹோம்லி லுக்கில் கவரும் பிரியங்கா மோகனின் க்யூட் க்ளிக்ஸ்!

ஹோம்லி லுக்கில் கவரும் பிரியங்கா மோகனின் க்யூட் க்ளிக்ஸ்!

‘என் கேரியரே முடிந்துவிட்டது என்றார்கள்’.. விருது வழங்கும் நிகழ்ச்சியில் விஜய் சேதுபதி நெகிழ்ச்சி !

அடுத்த கட்டுரையில்
Show comments